உங்கள் வருகைக்கு நன்றி...

Saturday, December 3, 2011

பங்கு சந்தை அமீரகத்தில் ஒரு விழிப்புணர்வு

இந்திய பங்கு சந்தையைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆவல் என்னிடம் இருந்துக் கொண்டே இருந்தது. அமீரகத்தில் பல அமைப்புகள் இருந்தாலும் அவைகள் தங்கள் ஆண்டு விழாக்களுக்கு சினிமா சம்பந்தப்பட்டவர்களையும் இலக்கிய சம்பந்தபட்டவர்களையும் மட்டுமே அழைத்து வந்து அமீரக தமிழ் மக்களுக்கு கேளிக்கைகளாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.



இன்னும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட ஒரு விழிப்புணர்வு நம் மக்களிடையே அதிகமாக இல்லை என்றக் கண்ணோட்டத்தில் எனது பார்வை..!

சில தினங்களுக்கு முன் திருவாரூர் நண்பர் பிரோஸா எனக்கு தொலைபேசி செய்தார்.. இன்ன தேதியில் நான் துபாய் வருகிறேன் நான்கு நாட்கள் மட்டுமே இருப்பேன் தாங்கள் என்னை எப்படி பயன்படுத்திக் கொள்ளமுடியுமோ அப்படி செய்துக் கொள்ளுங்கள் என்றார்.

அதற்கு முன் பிரோஸாவைப் பற்றிய ஒரு அறிமுகம்
37 வயது நிரம்பிய இளைஞர் எம்.காம் படித்தவர் திருவாரூர் ராபியத்து அம்மாள் கல்லூரியின் டிரஸ்ட் மெம்பர் …

2002 ல் பங்கு சந்தைக்குள் நுழைந்தவர் பல நஷ்டங்களை சந்தித்தவர் அந்த நஷ்டமே தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும் என்ற ரீதியில் இழந்ததைப் போன்று பல மடங்கு பங்கு சந்தையில் சம்பாதித்தவர். அதன் ருசி கண்டதினால் தன் சம்பாத்திய இலக்கை அதன் பக்கமே சார்ந்து இருக்க வேண்டும் எனக்கருதி இந்திய பங்கு சந்தை புரோக்கர்களில் முன்னனில் இயங்கும் மோத்திலால் ஓசூல் செக்யூரிட்டி நிறுவனத்தில் சப்புரோக்கராக தன்னை இணைத்துக் கொண்டு திருவாரூர், சென்னை, கூத்தாநல்லூர் ஆகிய இடங்களில் அலுவலகம் அமைத்து பங்கு சந்தை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

இரண்டாண்டுகளுக்கு முன் நான் தாயகம் சென்றிருந்தபோது திருவாரூரில் பங்கு சந்தை விழிப்புணர்வு மாநாடு நடத்தியவர் இவ்விழாவிற்கு பங்கு சந்தை நிபுணர் சோம.வள்ளியப்பன் வந்திருந்தார். திருவாரூரை சுற்றியுள்ள பள்ளி மாணவர்கள் 1000 திற்கும் அதிகமானவர்கள் அதில் கலந்து பயனடைந்தார்கள். இன்னும் கல்லூரிகளுக்கும் சென்று மாணவர்களிடையே  விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

இப்படி ஆண்டுதோறும் திருவாரூரில் பொருளாதார நிபுணர்களை வைத்து நிகழ்ச்சிகளை அமைதியான முறையில் செய்துவருபவர்.

2007 லில் எனக்கு அறிமுகமான இவரிடம் பங்கு சந்தையைப் பற்றிய பல தகவல்களை பெற்றிருக்கிறேன். பங்குசந்தைப் பற்றிய என்னிடம் நிறைந்திருக்கும் ஆர்வத்திற்கு முழுக் காரணம் இவர்தான் என்று இங்கு பதிவு செய்வதில் பெருமிதம் அடைகிறேன். அதேபோல் சில நண்பர்களையும் குறிப்பாக அமீரகத்தில் நீண்ட வருடங்களாக DEWA என்றழைக்கப்படும் துபாய் மின்சார வாரியத்தில் கணக்கு அதிகாரியாக பணிப்புரியும் எஸ்.எம்.பாரூக் போன்றவர்களை அறிமுகம் செய்துவைத்திருக்கிறேன் இன்னும் பலரையும் அறிமுகம் செய்துவைக்க வேண்டும் என்ற ஆர்வமும் நிறைந்திருக்கிறது. இது உள்நோக்கம் கருதி அல்ல என்பதை இங்கு தெளிவுபடுத்துகிறேன்.

சரி மீண்டும் அமீரகத்திற்கு வருவோம்…பிரோஸாவின் அமீரக வருகை உறுதியானவுடன் நண்பர் எஸ்.எம்.பாரூக்கிடம் கலந்து ஆலோசித்து பலரும் பயனடைய வேண்டும் என்ற பொது நோக்கில் சில தமிழ் அமைப்புகளுக்கு தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் தொடர்புக் கொண்டேன்.

யாரும் சரியான பதிலை தராததினால் இறுதியாக துபாயில் வாரந்தோறும் இயங்கும் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கிய பேரவையின் தலைவர் முஹம்மது மஹ்ஃரூப் அவர்களிடம் விசயத்தைக்கூற தாரளமாக இங்கு வைத்து நடத்துங்கள் ஆனால் கூட்டத்தை நீங்கள்தான் கூட்ட வேண்டும் என்றார்.

முயற்சிக்கிறேன் என பல அமைப்பினருக்கும் நண்பர்களுக்கும் மின்னஞ்சல் செய்தேன்… முயற்சி என்பது நம்மிடம் இருக்கும் வரையில் அதன் பலன் கூடலாம் குறையலாம் என்றும் கிடைக்காமல் போவதில்லை… அப்படித்தான் ஒரு பெரிய கூட்டமில்லை என்றாலும் மனம் நிறைவானக் கூட்டம் இருந்தது…

பங்கு சந்தை என்றால் என்ன? இதில் இறங்கியவர்கள் லாபம் அல்லது நஷ்டம் அடைகிறார்களா? இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஷரிஅத் அடைப்படையிலான பங்குகளை வாங்குவது எப்படி? அப்படிப்பட்ட நிறுவனங்களை நாம் எப்படி தேர்வு செய்வது? அதன் அளவு கோல் என்ன? எதிர்காலத்தில் பங்கு சந்தையின் போக்கு எப்படி இருக்கும் இப்படி அடுக்கடுக்கான பல கேள்விகளுக்கு தெளிவான பதிலை அளித்தார் பிரோஸா.
இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் பலருக்கு பல சந்தேகங்கள் தெளிவாகின என்பதை நிகழ்ச்சி முடிந்து பலரும் பிரோஸாவை சூழ்ந்துக் கொண்டு தங்களின் நன்றியை கூறிக்கொண்டார்கள். இந்த நிகழ்ச்சிக்கு கீழக்கரை அப்துல்காதிர் (சீனாதானா
)அபுதாஹிர்  மற்றும் குத்தாலம் அசரப்அலி, கொல்லாபுரம் முனாப், திருச்சி சையது இன்னும் பல நண்பர்களும் கலந்துக் கொண்டனர்.
இவர் அமீரகத்திற்கு வியாபார நோக்கில் வந்துள்ளாரே தவிர இங்கு செமினார் செய்து பணம் செய்ய வரவில்லை என்பதை நிருபித்தார்...

இந்நிகழ்ச்சிக்குப் பின் அமீரகத்தில் 30 ஆண்டுகளாக இயங்கிவரும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் வெள்ளிக்கிழமை காலையில் பிரோஸாவின் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கிடையில் நண்பர் நாசர் மற்றும் எஹ்சானுல்லா இவர்களுடன் வியாபார கருத்து பரிமாற்றங்களும் இன்னும் தொழிலதிபர்களுடன் நடந்த இரவு விருந்தில் இந்திய பொருளாதாரத்தைப் பற்றிய ஒரு நீண்ட உரையடலும் நடைபெற்றது.

அதுமட்டுமின்றி அமீரகத்தில் பிரபலமான ஹலோ எப்எம்மில் பிரோஸாவிடமிருந்து பேட்டி எடுத்தும் ஒலிப்பரப்பினார்கள்.

அவரிடம் கேட்டேன் பலரை சந்தித்தீர்கள் ஏன் அவர்களை எல்லாம் உங்கள் வாடிக்கையாளராக ஆக்குவதற்கு முயற்சிக்கவில்லை?என்றேன்.

பங்கு சந்தையைப் பற்றிய விபரங்களை தெரிந்துக் கொண்டால் அவர்களுடைய சேமிப்பும் அதன் வளர்ச்சியும் எதிர் காலத்தில் அவர்களுக்கு பெரிய நன்மையாக இருக்கும் அதை தெளிப்படுத்துவதுதான் என் நோக்கம்…எனக்கு வாடிக்கையாளரை ஏற்படுத்துவதற்கா வேண்டி விழிப்புணர்வுக் கூட்டம் இங்கும் சரி திருவாரூரிலும் செய்யவில்லை என்றார்.
இவருடைய உயரிய பொது நோக்கை எண்ணி மனதார வாழ்த்தினேன்.

சேமிப்பு என்பது எல்லோருக்கும் அவசியமான ஒன்று ஆனால் அந்த சேமிப்பின் வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட வருடங்களில் நம் தன்னிறைவை அளிக்க வேண்டும்.. அப்படிபட்ட சேமிப்பைப் பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லை என்பதே உண்மை…
சமீபகாலமாக ரியல் எஸ்டேடின் வளர்ச்சி அபரிவிதமாக பலருக்கு இருந்திருக்கிறது… ஆனால் அதில் எல்லோருமே பயனடையவில்லை காரணம் தங்களின் பொருளாதார சூழ்நிலை மற்றும் சரியான சேமிப்பு திட்டமிடல் இல்லாமை…

எனது தந்தை 1985-ல் எல்ஐசி பாலிசியில் சேமிப்பதற்கு வழிகாட்டனார் ஆண்டுதோறும் அன்று 4885 செலுத்தினேன். 20 ஆண்டுகள் கழித்து என்னிடம் இரண்டு லட்சத்து முப்பதாயிரம் எல்ஐசி கொடுத்தது… அந்த தொகையை வைத்து சென்னையில் அரைகிவுண்ட் நிலம் வாங்க முடியவில்லை.

ஆனால் அதே 1985-ல் விப்ரோ என்ற சாப்ட் வேர் கம்பெனியில் ஒரே தவணையில் 5000 ரூபாய்கு அந்த நிறுவனத்தின் பங்கை வாங்கிருந்தால் 2005-ல் பல கோடிகளுக்கு அதிபதியாகி இருக்கலாம் என்பதை எல்லாம் பங்கு சந்தைக்குள் நுழைந்தவர்களுக்கு தெரியவருகிறது.

பங்கு சந்தை லாபம் மட்டுமே தருவதில்லை நஷ்டமும்தான் பங்கு சந்தை என்பது வியாபாரம்… அதனால் சேமிப்பை அதிகரிப்போம் நன்கு அதேநேரத்தில் பாதுகாப்பான சேமிப்பாக நம் உழைப்பின் ஊதியங்களை சேகரிப்போம்…

இப்படிபட்ட சேமிப்பு விபரங்களை பிரோஸாவிடமிருந்து திரட்ட முடிந்தது… அவருடம் சென்ற நான்கு நாட்கள் அலாதியான சேமிப்பான நாட்கள்…

துபாயை சுற்றிக்காட்ட அவருடம் எஸ்.எம்.பாரூக் நியாஸ் மற்றும் சங்கர் நான் சுற்றி காண்பித்தோம்…

துபாய் நாட்டின் வளர்ச்சியைக் கண்டு அந் நாட்டு மன்னரை மனதார வாழ்த்தினார்… இத்தனை பெரிய பொருளாதார வீழ்ச்சியிலும் இந்தநாடு இவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறது என்றால் அந்த வீழ்ச்சி
இல்லாதிருந்தால் துபாயின் வளர்ச்சி மிக அதிதமாக இருந்திருக்கும்…

துபாய் வளர்ந்ததைபோல நம் மக்களும் பொருளாதார வளர்ச்சியில் மேம்பட்டு வளர்ந்து வரவேண்டும் என்ற பிரார்தனையுடன் விடைபெற்றார் பொருளாதார நிபுணர் பிரோஸா…..

13 comments:

ராம்ஜி_யாஹூ said...

good thing, but Indians in Dubai should try to invest in Dubai and International companies shares, where the gain will be much more

கிளியனூர் இஸ்மத் said...

மிக்க நன்றி ராம்ஜி_யாஹூ சார்.

Jazeela said...

//சில தமிழ் அமைப்புகளுக்கு தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் தொடர்புக் கொண்டேன்.// கண்டிப்பாக நீங்கள் அமீரகத் தமிழ் மன்றத்தை தொடர்பு கொள்ளவில்லை என்பதை பதிவு செய்து கொள்கிறேன். உறுப்பினர்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கும். வாய்ப்பை நழுவவிட்டுவிட்டோம்.

ஸாதிகா said...

சகோதரர் இஸ்மத்..கூடிய சீக்கிரம் ஆப்ரிக்காவில் இதுபோன்ற நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்யுங்கள்.என் கணவர் முதல் ஆளாக ஆஜர் ஆகி விடுவார்கள்:)

கிளியனூர் இஸ்மத் said...

சகோதரி ஜெஸிலா அவர்களுக்கு தாங்கள் அச்சமயத்தில் துபாயில் இல்லை என்பதை ராஜாகான் மூலம் அறிந்துக் கொண்டேன் அதனால் தொடர்புக் கொள்ளவில்லை...

கிளியனூர் இஸ்மத் said...

இன்ஷாஅல்லாஹ் நான் ஆப்ரிக்காவில் இருக்கும்போது முயற்சிக்கிறேன் சகோதரி ஸாதிகா...நன்றி

ravishankar sridharan said...

Sir chanceless great......! Many thanks

sultangulam@blogspot.com said...

நல்ல நிகழ்ச்சி. கலந்து கொள்ள இயலவில்லை. தங்களின் முயற்சி பாராட்டுதலுக்குரியது.

கிளியனூர் இஸ்மத் said...

மிக்க நன்றி ரவிசங்கர்

கிளியனூர் இஸ்மத் said...

மிக்க நன்றி சுல்தான்பாய்

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
பங்கு சந்தை பற்றிய கண்ணோட்டத்தை கண் முன் கொண்டு வந்துவிடீர்கள் சகோ...உங்களின் இம்முயற்சிக்கு வாழ்த்துக்கள்........

இன்றைய சூழலில் பயன்தரத்தக்க கட்டுரை இது...பதிவு நல்லா இருந்தது....முயற்சி தொடரட்டும்.உங்க தளத்திற்கு நாங்க வந்தோம்ல,எங்க தளத்திற்கும் நீங்க வாங்க..தளத்தில் உறுபினராக ஆகுங்கள்

www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் ......உங்களையெல்லாம் திருத்தவே முடியாது!,நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-3), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..இன்னும் பல. அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

அ.மு.அன்வர் சதாத் said...

இஸ்மத் அண்ணனின் பங்குச்சந்தை ஆர்வம்
என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

பங்குச்சந்தை குறித்து தவறான தகவல்களை தந்து
நமது மாயவரம் பகுதியில் கோடிகளை
கபளீகரம் செய்திருக்கிறார்கள் பலர்.

பங்குச்சந்தை எவ்வளவு வாய்ப்புகளை
தருகிறது என்பதை நமது பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.

சரியான நிதி திட்டமிடல் நம் பகுதி
மக்களுக்கு தேவை.

அது குறித்து ஆய்வு செய்துவருகிறேன்.
இந்த சோதனை கூடத்திலும் நானே குரங்கு.

கிளியனூர் இஸ்மத் said...

மிக்க நன்றி அன்வர் சதாத்

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....