உங்கள் வருகைக்கு நன்றி...

Saturday, October 31, 2009

தங்க முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும்


பதிவர் பராரி அவர்கள் பின்னூட்டத்தில் தங்கத்தைப்பற்றி எழுதுங்களேன் என்று கூறியிருந்தார். நான் தங்கக் கடையில் பணிப்புரிவதை அறிந்தவர் என்றே நினைக்கிறேன். இதற்கு முன் பதிவிட்டுக் கொண்டிருந்த கவிவனம் என்ற எனது வலைப்பூ வைரஸ் தாக்குதலினால் முடங்கிப்போனது. அதில் தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கும் தங்கத்தை வாங்குபவர்களுக்கும் சில யோசனைகளை எழுதியிருந்தேன். அதை மீள்பதிவாக இங்கு எழுதவில்லை யென்றாலும் தங்கத்தைப்பற்றிய நிகழ்காலத்தின் நிலைகளை எனக்கு தெரிந்த விசயங்களை கொஞ்சம் சொல்லலாம் என்று நினைக்கிறேன். எழுதத்தூண்டிய நண்பர் பராரி அவர்களுக்கு நன்றி.
(0)
தங்கம் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கிறது.வீடு இல்லாமல் இருப்பவர்களைவிட தங்கம் இல்லாமல் இருப்பவர்கள் மிகக்குறைவு என்றேதான் சொல்லவேண்டும். ஆண்களைவிட பெண்களை அதிகமதிகம் கவரக்கூடியது தங்கம்.
(0)
பல ஏழைகளின் வாழ்க்கையில் விளையாடிக்கொண்டிருப்பது இந்தத்தங்கம்.
வரதட்சணை என்பது பணமாக கொடுக்கப்படும் கைக்கூலி. ஆனால் இன்று வரதட்சணை பணமாக அல்லாமல் பல இடங்களில் தங்கமாக வாங்கப்படுகிறது கொடுக்கப்படுகிறது.100 சவரண் 200 சவரண் என்று வசதிக்கேற்ப கேட்கப்படுகிறது.
(0)
ஆசியா கண்டத்தில் அதிகமான தங்கம் இறக்குமதியும் விற்பனையும் நம் இந்தியாவில்தான் நடக்கிறது. இந்தியர்கள் பெரும்பாலோர் தங்கத்தை சேமிப்பு நோக்கம் கருதியே வாங்குகிறார்கள்.
இப்படி சேமிப்பின் நோக்கத்தில் வாங்கக்கூடிய தங்கம் தரமானது தானா.? நாம் கொடுக்கக்கூடிய பணத்திற்கு தகுந்த மதிப்பு அந்ததங்கத்தில் இருக்கிறதா.? என்ற பல சந்தேகக்கேள்விகள் நம்பலரிடையே இருந்து வருகிறது.
(0)
காய்கறி கடைகளில் நம்பெண்கள் காய்களை ஒடித்துப்பார்த்து அழுத்திப்பார்த்து நசுக்கிப்பார்த்து முகர்ந்துப்பார்த்து வாங்குவார்கள்.
புடவைக்கடைகளில் தரம் நிறம் துணியின் தன்மை என்று பார்த்து பார்த்து பல கடைகளில் ஏறி இறங்கி வாங்குவார்கள்.
ஆனால் தங்கக்கடையில் மட்டும் நம்பெண்களும் ஆண்களும் எளிமையாக ஏமாந்துவிடுகிறார்கள் ஏமாற்றிவிடுகிறார்கள்.காரணம் தங்கத்தை உரசிப்பார்க்க அதன் தரத்தை அலசிப்பார்க்க ‘லேப்;’ வசதி எல்லா ஊர்களிலும் இல்லை.
(0)
இன்று பல நகைக்கடைகளில் வாங்கக் கூடிய தங்கத்தை இயந்திரத்தில் வைத்து சோதனை செய்து கொடுப்பதாக நிறைய விளம்பரங்கள் பார்க்க முடிகிறது. இதுவும் ஒருவகையான ஏமாற்றல்தான்.
இன்றைய பெண்கள் கொஞ்சம் விழிப்புணர்வாக இருப்பதினால் தங்கத்தைப்பற்றி பலவிதமான கேள்விகள் கேட்பதினால் அதே விழிப்புணர்வுக்கு தங்கவியாபாரிகளும் இயந்திரங்களின் மூலம் வந்துக்கொண்டு இருக்கிறார்கள். இதில் எல்லா நகைக்கடைக்காரர்களும் ஏமாற்றுகிறார்கள் என்று நான் கூறவில்லை. அதிகமானோர் ஏமாற்றுகிறார்கள் என்றே சொல்கிறேன்.

ஒரு கடையில் வாங்கிய நகையை அதை விற்கும் போது இன்னொரு கடைக்காரர் வாங்குவதில்லை அப்படியே வாங்கினாலும் அடிமாட்டு விலைக்கு எடுத்துக்கொள்வார்கள். காரணம் என்ன.? அதன் தரம் அவர்களுக்கு தெரியும்.இது இந்தியாவில் செய்து இந்தியாவில் விற்கப்படும் நகைகளுக்கு மட்டும்தான்.இதே வெளிநாட்டிலிருந்து குறிப்பாக துபாய் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாங்கிய நகைகளுக்கு எந்தக்கடைக்கு போனாலும் நல்ல தொகை கிடைக்கும்.காரணம் தரம்தான்.
(0)
ஏன் நம்மவர்கள் அந்தத்தரத்தை கொடுக்கக்கூடாது.?
(0)
அப்படிக்கொடுத்தால் அவர்களால் அதிகமான லாபம் ஈட்டமுடியாது. உல்லாசமான வாழ்க்கை வாழமுடியாது. பல நகைக்கடைக்கார்களின் வாழ்க்கையைப் பாருங்கள். எனக்கு தெரிந்த பத்தர்கள் சிலர் இன்று பெரிய நகைக்கடை அதிபராகத் திகழ்கிறார்கள்.
(0)
சாதாரனமாக துவங்கிய கடைகள் நாளடைவில் அழங்காரமாக வடிவமைத்து விஸ்திரப்படுத்தி குளிர்சாதனங்கள் வைத்து மக்களை கவரக்கூடிய அளவிற்கு வளர்ந்திருப்பார்கள். நேர்மையான வியாபாரத்தில் எளிதில் இப்படியானதொரு வாழ்க்கைக்கு வரமுடியாது என்பது உண்மை. அவர்களின் ஆடம்பரமான வாழ்க்கைக்கு அப்பாவிமக்களின் உழைப்பை வேர்வையை சுவைப்பது எந்த வியாபாரிக்கும் நியாயமானதல்ல.
ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்று சொல்வார்கள்.நாம் விழிப்புணர்வுடன் இருந்தால் நம் பணத்தை நாம் வாங்கக்கூடிய பொருளை தரமாக நியாயமாக வாங்கலாம்.
(0)
இந்தியாவில் வாங்கிய 22கேரட் நகையை துபாயில் விற்பனை செய்தால் அல்லது நகைமாற்றம் செய்தால் அதற்கான மதிப்பு என்னத் தெரியுமா.?
18kt மதிப்புபோட்டு எடுப்பார்கள் அதாவது ஒரு கிராம் 22கேரட் இந்திய ரூபாய்படி 1500 க்கு வாங்கி இருப்பீர்கள். அதை விற்கும் போது 1200 க்கு வாங்குகிறார்கள்.இந்த 1200- 18kt விலை.300ரூபாயை நாம் ஒரு கிராமுக்கு இழக்கிறோம்.
இதே துபாயில் வாங்கப்பட்ட 22kt தங்கத்தை துபாயிலேயே நகைமாற்றம் செய்தால் 30 ரூபாய் மட்டும் (3திரஹம்)ஒரு கிராமுக்கு குறைத்து எடுத்துக் கொள்வார்கள்.இந்தியாவில் அதேவிலைக்கு எடுத்துக் கொள்கிறார்கள்.
அப்படிப்பார்த்தால் 270 ரூபாய் ஒரு கிராமுக்கு இந்திய நகைக்கடைக்காரர்கள் நம்மிடம் அதிகமாக வாங்குகிறார்கள்.
ஒரு கிராமுக்கு 270 என்றால் 10 சவரண் நகை (80 கிராம்) வாங்கப்படும்போது 21600 ரூபாயை நாம் ஏமாறுகிறோம்.இது தரமில்லாத நாம் 22kt என்று நம்பி வாங்கப்படும் நகைக்கு இந்த நிலை.
(0)
22kt, 21kt, 18kt - என்று தரம் வைத்துள்ளார்கள் அது எதன் அடிப்படையில் என்று பார்க்கலாம்.
இந்த கட்டுரை கொஞ்சம் பெரிதாக வரும்போல இருக்கிறது ஆதலால் தொடராக எழுதலாம் என்று நினைக்கிறேன். நகைப்பற்றி உங்கள் சந்தேகங்களையும் பின்னூட்டத்தில் எழுதுங்கள்.தொடர்வோம்…


தங்கத்தைப் பற்றி மொத்தம் ஏழு தொடராக எழுதி இருக்கிறேன்

Tuesday, October 27, 2009

ஒரு இரயில் பயணத்தில்....


சமீபத்தில் படித்த ஆங்கில சிறுகதை…நீங்களும் அதை ரசிப்பதற்கு இங்கு தமிழ்படுத்தியுள்ளேன்…

வயதான முதியவர் தன் 25 வயது வாலிப பையனை அழைத்துக்கொண்டு இரயிலில் பிரயாணம் செய்வதற்கு ஏறி அமருகிறார்.

இரயில் புறப்பட்டது

இவர்களின் இருக்கைக்கு எதிரில் இளம் தம்பதியினர் வந்தமர்ந்தார்கள்.

அந்த வாலிபர் தன் வயதான தந்தையிடம்
“அப்பா…அப்பா…ஜன்னல் பக்கம் நான் உட்காந்துக்கிறேனே”… என்று கேட்க அவரும் ‘சரிப்பா… வா உட்கார்’ என்று தன்னை நகர்த்திக் கொண்டார்.

இரயில் வேகமாக சென்றுக் கொண்டிருந்தது

அந்த வாலிபர் ஒரு கையை ஜன்னலுக்கு வெளியே நீட்டிப்பார்த்தார். காற்று அவருடைய கையில் பட்டு பின்னுக்கு தள்ளின.
இவர் பார்த்த மரங்கள் செடிகள் அனைத்தும் இரயிலின் ஒட்டத்தில் பின்னுக்கு சென்றன.

அந்த வாலிபனுக்கு ஆச்சரியமும் சந்தோசமுமாக இருந்தது. உடனே தன் தந்தையிடம்
“அப்பா…அப்பா…இங்கபாருங்க எல்லாமே பின்னாடி போகுது”…என்றான்.
வயதான தந்தை தன் மகனின் சந்தோசத்தைக் கண்டு புன்முறுவல் பூத்தார்.

அந்த வாலிபனின் செயல்களை எதிரில் அமர்ந்திருந்த தம்பதியினர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
25 வயது வாலிபன் சின்னபிள்ளைமாதிரி நடந்துக்கிறானே… பாவம் மனோநிலை சரியில்லாதவன்போல் தெரிகிறான் என்று எண்ணிக்கொண்டார்கள்.

கொஞ்சதூரம் சென்றப்பின் மீண்டும் அந்த வாலிபன் தன் தந்தையிடம்

“அப்பா…அப்பா…அங்கப்பாருங்க அதுதானேமேகம் .? இருட்டிக்கிட்டு நமக்கு பின்னாடி போகுதே” என்றான்.

அதற்கும் அந்தமுதியவர் புன்முறுவல் ப+த்தார்.

சற்று நேரம் அமைதியாக பெரிய நிபுணர்போல் ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்பொழுது மழைத்தூறு ஆரம்பித்தது… தன் தந்தையிடம்

“அப்பா… அப்பா…இதுதான் மழையாப்பா… என்னைத் தொடுதுப்பா”…என்று ஜன்னலில் தலைநீட்டி கண்களை மூடிக் கொண்டு நனைந்தான்…அவனுக்கு சந்தோசம் அதிகரித்தது.

அந்த வாலிபனைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த தம்பதியினர் அந்த முதியவரிடம்

‘உங்க பையனை நல்ல ஆஸ்பத்திரியில காண்பிக்கலாமே’.? என்றார்கள்

அதற்கு அந்த முதியவர்

“ஆஸ்பத்திரியிலிருந்துதான் வருகிறோம்.இன்றைக்கு தான் என்பையனுக்கு கண் கிடைத்திருக்கிறது உலகத்தை இன்றுதான் முதல் முறையாகப் பார்க்கிறான்” என்றார்.

நன்றி- வெங்கட்
அப்துல்வஹாப்

Thursday, October 22, 2009

கருப்பு வெள்ளை


நம்முடைய வாழ்க்கையில் மறந்துவிட்ட சில சம்பவங்கள் சில தருணங்களில் ஞாபகத்துக்கு வந்து நம்மை அந்தக் காலகட்டத்திற்கே அழைத்துச்செல்லும்.
இது பலருக்கும் நிகழக்கூடிய விசயம்தான். ஆனால் நிகழ்வுகள் மட்டும் ஒருவருக்கொருவர் வேறுபட்டிருக்கும்.

வாலிப பருவத்தில் நமக்கு நிறைய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நண்பர்களாகவும் இருப்பார்கள். காலம்கடந்து நாம் பின்னோக்கிப் பார்த்தால் நாம் பழகிய நண்பர்களில் ஒருசிலரைத் தவிர பலர் காணாமல் போயிருப்பார்கள்.ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.

அந்த ஒருசிலரிலும் நாம் இளமைக்காலத்தில் பழகிய வேகமிருக்காது. ஒரு இடைவெளி இருக்கும். எல்லாவிசயங்களையும் வாலிபத்தில் பேசியதைப்போல் இப்போது பேசவும் முடியாது. நம்மிடையே திரைஇருக்கும்.

அப்படி ஒரு நிகழ்வு நேற்றைய இரவு உறக்கத்திற்கு முன் என்சிந்தனை அரங்கில் பழைய நண்பனைப் பற்றி ஒடிக்கொண்டிருந்தது.அதை உங்களோடு பகிர்ந்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில்…இதோ

எனது அமீரக வாழ்க்கையில் ஏற்பட்ட நட்புகள் பெரும்பாலும் இலக்கிய சிந்தனையினால் ஏற்பட்டது என்றே கூறவேண்டும்.
அன்று முதல் இன்றுவரையில் அப்படித்தான்…

1985-ல் “டெலிபோன் டைரி” என்ற துப்பறியும் நாவல் ஒன்றை துபாயில் நண்பர்களுக்கு மத்தியில் வெளியிட்டேன். அப்போதெல்லாம் தமிழ் சங்ககங்கள் இன்று நிறைந்திருப்பது போல் அன்று இல்லை. ஒரு அமைப்பு இருந்தது ஆனால் அதில் எனக்கு பரிச்சயம் இல்லை.அதனால் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளில் நண்பர்களை டேராநைப்ரோடு தமிழ் சந்தையில் சந்திப்பது வழக்கம். அந்த சந்திப்பில் ஒரு மலையாளி தேனீர்கடையில் அமர்ந்து எனது முதல் நூலை வெளியிட்டேன்.
1986-ல் இஸ்லாமிய சிந்தனையில் “விற்பனைக்கு வந்த கற்பனைக்கதைகள”; என்ற தலைப்பில் சிறுகதைகளின் தொகுப்பினை வெளியிட்டேன்.இதுவும் தேனீர் கடையில் வெளியிடப்பட்டது.

அந்த தருணத்தில் அறிமுகமான நண்பர் திருவாருரைச் சார்ந்த ஒலிமுஹம்மது.
இவரின் அரசியல் உரையாடல் காமடியாக இருக்கும். அவர் பேசும்போது எனக்கு ஆச்சரியங்களை ஏற்படுத்தும். அப்போது வயது எனக்கு 22. அவருக்கு 26 வயது.

இவ்வளவு விசயங்களை எப்படி இவர் ஞாபகத்தில் வைத்து பேசுகிறார் என்பது அவரிடம் பழகிய பின் நாட்களில் விளங்கிக்கொண்டேன்.
தினசரி பத்திரிக்கைகளையும் வாரப் பத்திரிக்கைகளையும் தொடந்து படித்து வருபவர்.
அவருடைய நட்பு என்னை அவருடன் நெருக்கத்துடன் பழகவைத்தது. எனது சொந்த கதைகளை குடும்பக்கதைகளை அவருடன் கலந்துபேசுவதற்கும் விடுமுறை நாட்களில் அவருடைய அறைக்கு செல்வதும் அவர் எனது அறைக்கு வருவதும் என் எழுத்துப்பணிகளுக்கு மிக உற்சாகத்தைக் கொடுப்பதுமாய் எங்களின் பொழுதுகள் நகர்ந்து கொண்டிருந்தது.இதில் எனது முதல் அமீரக நண்பனும்.
ஆம்
அமீரகத்தில் 1980 – டிசம்பரில் கால்பதித்தேன். எனக்கு முதன்முதலில் அறிமுகமான நபர் அத்திக்கடை சிஹாபுதீன் இவர்தான் எனது முதல் நண்பனாகவும் மாறினார்.இன்றும் நட்பு இருக்கிறது அன்றைய நெருக்கம் இல்லை.

நாங்கள் மூவரும் பின் நாட்களில் குடும்ப நண்பரானோம். விடுமுறையில் தாயகம் சென்றால் அவசியமாக நண்பர்களின் வீடுகளுக்கு சென்று வருவது வழக்கமாகிகப் போனது.

அப்படித்தான் நண்பர் ஒலிமுஹம்மது தன்னுடைய திருமணத்திற்க்காக விடுமுறையில் தாயகம் சென்றார். எங்கள் வீட்டுதேவைப்போல எனது குடும்பத்தார் அனைவரும் சென்று தங்கி வந்தனர்.

அவருக்கு திருமணமாகி இரண்டு நாட்களில் எனது சகோதரனுக்கு பைக் விபத்து நடந்துவிட்டது. எனது சகோதரனை பாண்டிச்சேரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

செய்தியறிந்த எனது நண்பர் ஒலிமுஹம்மது உடனே புறப்பட்டு பாண்டிச்சேரி சென்று அறுவைசிகிச்சை என் சகோதரனுக்கு முடியும்வரையில் ஒருவாரக்காலம் அங்கு மருத்துவமனையில் தங்கி என்சகோதரனுக்கு வேண்டிய உதவிகளை செய்துவிட்டு வந்துள்ளார்.

திருமணமான புதுமாப்பிள்ளை தனது மனைவியை விட்டு பிரிந்து ஒருவாரக்காலம் தனது நண்பனின் சகோதரனுக்காக வேண்டி மருத்துவமனையில் தங்கிஇருந்தது பெரிய விசயம். அவர் வீட்டில் எப்படியெல்லாம் பிரச்சனை வந்திருக்கும்.எப்படி யெல்லாம் பேசிஇருப்பார்கள். இந்த தியாகத்தை யாருக்காக செய்தார்.
ஆனால் அன்று இதன் கனம் எனக்கு தெரியவில்லை. நட்பு என்ற ஒரு உறவு மட்டும்தான் தெரிந்ததே தவிர ஒருமனிதனின் உணர்வு உதவி அதன் மதிப்பு விளங்கவில்லை.

பின் அந்த நண்பர் விடுமுறைக்கழித்து மீண்டும் துபாய் வாழ்க்கைக்கு வந்தார்.அடுத்து எனது திருமணத்திற்க்காக நான் தாயகம் செல்ல எத்தனிப்பதற்கு முன் அவருடைய கம்பெனியில் சில பிரச்சனைகளால் அவருடைய வேலையை ராஜினாமா செய்து விட்டு தாயகம் செல்லக்கூடிய சூழ்நிலை வரவே அவரை அனுப்பிவைத்தோம்.

பின் நான் தாயகம் செல்கிறேன்…எனது திருமணவிசயத்தில் சில குழப்பங்கள் என்குடும்பத்தில் நடந்தது. அதை பேசி சமாதானத்தை ஏற்படுத்தி என் திருமணம் நடக்க உதவியாக இருந்தவர்.
எனது திருமணத்திற்கு பின் நாங்கள் ஒரு குடும்பமாகவே பழகிவந்தோம். கொடுக்கல் வாங்களில் கணக்குகள் கிடையாது.
சிலவருடங்கள் அவர் தாயகத்திலேயே தொழில் செய்து வந்தார். என்னால் முடிந்த பொருளாதார உதவிகளை அவருக்கு செய்தேன்.
நான் எனது குடும்பத்தை துபாய்க்கு அழைத்துக் கொண்டேன்.

ஒரு நாள் நண்பர் தொலைபேசிசெய்து நான் துபாய்வரனும் விசா வேண்டும் என்றார்.
நானும் விசாவை விசாரித்தவரையில் அப்போது ஐயாயிரம் திரஹம் கொடுத்தால் இரண்டுவருட விசாக் கிடைக்கும் ஆனால் நாம் எங்கு வேண்டுமானாலும் வேலைப்பார்த்துக் கொள்ளலாம் என்ற சட்டம் இருந்தது. அதன்படி அவருக்கு விசா எடுத்து துபாய் அழைத்தேன். விசா சிலவிற்க்காக அவருடைய உறவினரிடமிருந்து ஆயிரம் திரஹம் வாங்கித்தந்தார் அவ்வளவு தான். அவர்தங்கு வதற்கு அறை ஏற்பாடு செய்து அவருடைய அன்றாட சிலவிற்கு பணமும் நான் கொடுக்கவேண்டி இருந்தது.

சிலமாதங்கள் சில வேலைகளுக்கு சென்று விட்டு வேலைபிடிக்கவில்லை என்று திரும்பவந்து விடுவார். அந்த தருணங்களில் நான் வாங்கிய சம்பளம் எனது குடும்பசிலவு நண்பரின் சிலவுக்கு எல்லாம் சேர்த்து எனக்கு பாரமாக இருந்தது.
ஒரு நாள் அவரிடம் என்னுடைய நிலையைப் பற்றியும் பேசினேன். கேட்டுக்கொண்டார்.

ஆனால் எங்கள் நட்பில் முன்னிருந்த சிநேகநெருக்கம் எங்கள் இருவரிடத்திலுமே இல்லை. அவர் சில வருடங்கள் தன் குடும்பத்தாருடன் தங்கிஇருந்ததினால் குடும்ப சிந்தனைகளுக்கு உட்பட்டிருக்கலாம் அதைப்போல் தான் எனக்கும் இருந்தது.

நாங்கள் தினசரி சிலமணிநேரங்கள் சந்தித்து பேசுவதுண்டு…அப்போதுக் கூட பழையமாதிரியான பேச்சு எங்களிடையே இல்லை.

ஒருநாள் அவர் தங்கிருந்த அறைநண்பர் எனக்கு தொலைபேசி செய்து உங்கள் நண்பர் நேற்று இரவு ஊருக்கு சென்று விட்டார். விசாவை ரத்துசெய்து விட்டு போய்விட்டார்.என்று சொன்னதும் நான் மிகுந்த வருத்தத்திற்கு ஆளானேன்.

சில தினங்கள் கழித்து இந்தியாவிலிருந்து கடிதம் போட்டிருந்தார். அதில் அவருக்கு விசா எடுத்த நபரிடம் கொடுத்த காசைகேட்டுவாங்கவும்.இரண்டு வருடம் முழுமையடையாததால் அந்தபணத்தை திரும்ப கேட்டு வாங்கி என்னுடைய பணத்தை அனுப்பிவைக்கவும் .

அதற்கு பதில் எழுதினேன் நாமாக விசாவை ரத்துசெய்து விட்டு போனதற்கு அவர்கள் பணம் தரமாட்டார்கள். என்னிடம் கூட ஒரு வார்தையும் சொல்லாமல் நீ சென்றது எனக்கு ரொம்ப கஸ்டமாக இருந்தது. உன் பணத்தை அனுப்பச் சொல்லி எழுதிஇருந்தாய். நீ 1000 திரஹம் தான் கொடுத்தாய் ஆனால் 4000 விசாவிற்கு நான் கொடுத்துள்ளேன். அதை யார் தருவது என்று.

எப்போதும் என்வீட்டுக்கு செல்லக் கூடியவர் இந்தமுறை செல்லவில்லை.
கடித தொடர்பு நின்று போனது. சிலவருடங்கள் கழித்து தாயகம் சென்ற நான் அவரைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வராததினால் அப்படியே மறந்துப்போனேன்.

இன்றுவரையில் அந்த நண்பனை நான் காணவில்லை. பலமுறை திருவாருர் சென்று வந்திருக்கிறேன் அவரும் என் கண்ணில் படவுமில்லை.

அந்த நண்பனின் உதவிகளை என்றும் மறக்க இயலாது.எவ்வளவுதான் கொடுக்கல் வாங்களில் ஒருவருக் கொருவர் கடன் பட்டிருந்தாலும் அந்த பணத்தையும் விட, என்மனதில் பதிந்து போன நட்பே இந்தக் கட்டுரையை எழுதத்தூண்டியது.
காலங்கள் கடந்தாலும் பழகிய நட்புகள் மனதில் பசுமையாகத்தானிருக்கும்.மறந்துவிட்டோம் என்று எண்ணினாலும் சில தருணங்களில் மறதி தன்னைமறக்க பழைய நினைவுகள் நம்மை ஆட்கொள்ளும் …!

Thursday, October 15, 2009

சின்னவிருது நம்மைச் சிறைப்படுத்துகிறதா...?


உலகம் சுற்றும் வாலிபன் என்ற பெயரில் நோபல் விருது மாதிரி பதிவர் நாஞ்சில் பிரதாப் எனது சுற்றுலா பதிவுகளை படித்துவிட்டு விருது கொடுத்துள்ளார்.
அண்ணாருக்கு நன்றி.

(0)

சென்றுவந்த நாடுகளை பார்த்தஇடங்களை பதிவிடுவதால் பலருக்கு அல்லது சிலருக்கு பிரயோஞனமாக இருக்கலாம் . அப்படி சிலருக்கு அவசியமேற்பட்டு
சிலர் தொலைபேசியிலும் சிலர் மின்னஞ்சலிலும் பயணத்தின் சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டார்கள்.
பிறருக்கு பிரயோஞனம் என்றபோதிலும் சுற்றிவந்தவர்களுக்கு தங்களின் அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் அலாதி இருக்கிறது. இப்படி பகிர்வதற்காக வேண்டி சுற்றிய சில பத்திரிக்கையாளர்களின் பயணக்கட்டுரையை நான் படித்திருக்கிறேன் அதனுடைய தாக்கமாகவும் கூட இருக்கலாம்.
நான் இங்கு பதிவுப்போடுவதற்காக சுற்றியதில்லை இனி அப்படி சுற்றினாலும் தவறில்லை என்றே நினைக்கிறேன்.

(0)

எழுதிய பயணக்கட்டுரையில் பல ஆங்கில வார்த்தைகளை பிரயோகித்துள்ளேன். காலப்போக்கில் அதைதவிர்த்துக் கொள்ள முயற்சிக்கிறேன்.
ஒரு பதிவைபதிவிடும் போது பலரும் வந்து படிப்பார்கள் பின்னூட்டமிடுவார்கள் என்று நம்பி ஏமாறக்கூடாது என்ற அனுபவத்தை பதிவுலகம் எனக்கு கற்று தந்திருக்கிறது.
பலருடைய பதிவுக்கு சென்றாலும் செல்லக்கூடிய அனைத்து பதிவுகளையும் படித்துவிடுவதுமல்ல அதற்கு பின்னூட்டமிடுவதுமல்ல. படிக்கும் அந்த தருணத்தில் படிப்பவரின் மனோநிலை எழுதியவரின் எளிமையான விளங்கவைத்தல் சுவாரஸ்யம் நடை இதைப் பொருத்தே மற்றவரின் படித்தலும் பின்னூட்டமும் அமைகிறது.
சிலருடைய பதிவுகளை படிக்கும்போது விளங்குவதில்லை என்றால் அதற்கு வாசிப்பாளருக்கு பயிற்சி தேவைப்படுகிறது என்பதை வலையுலகத்தில் புரிந்துக் கொள்ளமுடிகிறது.

(0)

பலதரப்பட்ட விருதுகளை ஒருவருக்கொருவர் பதிவுலகில் பகிர்ந்துக் கொள்கிறார்கள். இந்த விருதுகளை யார் வழங்குகிறார்கள் என்று ஆரம்பத்தில் எனக்கு விளங்கவில்லை. பலருடைய பதிவுகளில் விருதுகளை பதித்து அதன் கீழ் கொடுத்தவரின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்கள் அதைப்பார்த்த மாத்திரத்தில் புரிந்துக்கொள்ள முடிந்தது.
தமிழ்மணம், தமிழீஸ், தமிழ்10, திரட்டி போன்றவர்கள் நட்சத்திர பதிவர்களை தேர்வு செய்து உற்சாகப்படுத்துகிறார்கள் விருதும் கொடுக்கிறார்கள். இவைகளில் இடம் பெறுவதற்கு அளவுகோள் வைத்திருப்பார்கள். அதற்கு தகுதியானால் நாம் நட்சத்திரமாகலாம். அந்த அளவுகோல் என்ன என்பதை விவரித்தால் பலரும் அதற்கு தகுதியினை வளர்த்துக் கொள்வார்கள் .
நாம் நம்மைபட்டைத்தீட்டிக் கொள்வதற்கு உற்சாகங்களை வழங்கி பல உள்ளங்கள் நமக்கு உரமேற்றுகிறார்கள்.

(0)

கருத்துபறிமாற்றங்களில் குழாயடிச்சண்டைகள் நடப்பதையும் பார்க்கமுடிகிறது.
வலைப்பூ என்பது நம் வீட்டு தோட்டத்தைப்போல் . ஒவ்வொருவரும் அவர்களின் விருப்பத்திற்கு செடிகளை வளர்ப்பார்கள் அதில் விளையும் களைகளை சுட்டிக்காட்டலாம் தவறில்லை ஆனால் அந்த செடிகளை பிடுங்கி எறிய நினைப்பது தவறு.
பதிவுலகில் இதைத்தான் எழுதவேண்டுமென்கிற நிர்பந்தம் ஏதுமில்லை. நினைத்ததை படித்ததை அனுபவங்களை இப்படி எதையும் எழுதலாம் என்ற சுதந்திரம்தான் என்னைப்போன்ற பலஆயிரம் பதிவர்களை இணையதளம் சுமந்துக் கொண்டிருக்கிறது.

(0)

நீங்க என்னச்சொல்லவர்றீங்க என நீங்க கேட்பது எனக்கு புரிகிறது. சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டிங்கிற மாதிரி நாஞ்சில் பிரதாப் தந்த விருது இதை எழுதவைத்துவிட்டது.
இப்படி சின்ன சின்ன விருதுகள் நம்மை மென்மேலும் எழுதத் தூண்டுகிறது .அது சிறையா.? அல்லது சுதந்திரமா.? என்று பட்டிமன்றம் நடத்துவதைவிட அது சந்தோசப்படுத்துகிறது என்பதால் பல பதிவர்களை நாம் சந்தோசப்படுத்தலாம்தானே…வாங்க சந்தோசப்படுத்துவோம்.!

Sunday, October 11, 2009

மும்மலைக் காண முசுந்தம்

சலாலாஹ் சுற்றுலாவை படித்து விட்டு பின்னூட்டமிட்ட அன்பு நெஞ்சங்கள் பராரி, ராஜூ, ஸ்டார்ஜன், கலை, அன்புடன் மலிக்கா, சிம்மபாரதி, சென்ஷி ,ச.செந்தில்வேலன், ஜெஸிலா, சிவராமன், சுல்தான், குசும்பன், மின்னுது மின்னல், நிஜாமுதீன், ராஜாகமால்.

தொலைபேசியில் தொடர்புக் கொண்டு வாழ்த்துக்களை வாரிவழங்கிய சீனிவாசன் மற்றும் ஜெபல்அலியிலிருந்து அன்பு சகோரதரர் (பெயர் மறந்திட்டேன் மன்னிக்கனும்) இவர்கள் தொடர்ந்து பதிவுகளை படித்து வருவதாக கூறி என்னை படிக்கவைத்துவருகிறார்கள்.
உங்கள் அத்தனைபேர்களுக்கும் என் நன்றியினை சமர்பிக்கிறேன்…!

மீண்டும் அமீரகவாழ் தமிழ் நெஞ்சங்களுக்கு இன்னொமொரு சுற்றுலா…அதாவது அவர்கள் எளிதாக சென்று பார்த்துவரக் கூடிய தூரம்.
இப்போ நாம் செல்ல இருப்பது முசுந்தம்.இது துபாயிலிருந்து 180 கிமீ தொலைவில் உள்ள ஒமான் நாட்டைச்சேர்ந்த பகுதி.
முசுந்தம் என்பது அந்த பகுதிக்கு உள்ள பெயர். அந்த பகுதியில் சிறிய நகரமாக இருக்கக்கூடியது கசப்.இங்கு படகில் நம்மை வெகுதூரம் அழைத்துச் செல்வார்கள்.
செல்லும் வழியில் டால்பீன்களை பார்க்கலாம். இருபக்கம் மலையும் நடுவில் கடல் நதிபோல் பார்ப்பதற்கு ஆனந்தமாக இருக்கும்.மலையின் உயரத்தில் ஏறி முசுந்தத்தை முழுமையும் பார்க்கலாம். துபாயிலிருந்து செல்லக்கூடியவர்கள் கட்டாயம் ரிஸிடன்ஸ் விசா உள்ள பாஸ்போர்ட்டுடன் செல்லவேண்டும்.

இது ராஸ் அல் கைமாவிலிருந்து சுமார் 20 கிமீ தொலைவில் அமீரக எல்லை இருக்கிறது. வெள்ளிவிடுமுறையில் அதிகாலை 6.00 மணிக்கு சொந்த வாகனத்தில் நாங்கள் புறப்பட்டோம். ராஸ் அல்கைமாவில் காலைடிபன் முடித்துவிட்டு 8.00 மணிக்கெல்லாம் அமீரக எல்லை (பார்டர்) வந்தோம்.
கடற்கரையை ஒட்டிய அந்த எல்லைமுடிவு இரசிக்கும்படியாக நம்மை பெரிதும் மகிழ்விக்கிறது.துபாய் இமிக்கிரேஸனில் எக்ஸிட் பண்ணுவதற்கு ஒரு பாஸ்போர்ட்டுக்கு 30திரஹம் கொடுக்கவேண்டும்.
அதை முடித்துக்கொண்டு அதற்கும் பக்கத்தில் உள்ளது ஒமான் நாட்டு எல்லை அங்கு நம் வாகனத்துக்கு இன்சூரன்ஸ் எடுக்கவேண்டும்.(ஒமான் இன்சூரன்ஸ் இல்லாத வாகனத்துக்கு மட்டும்) அதற்கு 100 திரஹம் அங்கேயே அலுவலகத்தில் கட்டவேண்டும்.
ஓமான் எல்லைக்குள் செல்லக்கூடிய நமக்கு நுழைவுத் தொகை (குழந்தைகளுக்கு இலவசம் …இது ஒமானில் மட்டும்) 10திரஹம் கட்டனும். அவ்வளவுதான் எ(தொ)ல்லை பிரச்சனைகளை முடித்துக் கொண்டு நாம சுற்றுவதற்கு புறப்படவேண்டியது தான். அந்த எல்லையிலிருந்து முசுந்தம் ஆரம்பமாகிறது நாம் அங்கிருந்து சுமார் 35 கிமீ தொலைவில் உள்ள கசப் என்ற சிறிய நகரத்திற்கு செல்லவேண்டும். கடல் ரோடு அதைஒட்டிய மலை… வளைந்து வளைந்து நெளிந்து செல்லக்கூடிய பாதை. விடுமுறை நாட்களில் தான் இங்கு வாகனங்களை அதிகம் காணமுடியும். நாங்கசென்ற போது அவ்வளவாக வாகனங்கள் இல்லை. செல்லும் வழியில் கடற்கரையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு மனதைகவர்ந்த பீச்சில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். காலை 11.00 மணிக்கு கசாப் சென்றடைந்தோம். அங்கு நிறைய சுற்றுலா அலுவலகங்கள் இருக்கிறது. கேரளத்து சகோதரர்கள் இருக்கிறார்கள்.ஒரு அலுவலகத்தில் படகில் செல்வதற்கு விசாரித்தோம். 900 திரஹம் என்று கூறினார்கள். சுமார் நான்கு மணிநேரம் சுற்றிவருவார்களாம்.அதில் பலங்கள் தேனீர் குளிர்பானங்கள் இலவசம். காலை 10 மணிக்கு படகை வாடகைக்கு எடுத்தால் மாலை 5.00 மணிக்கு தான் கரைக்கு திரும்புவார்கள். மதியம் சாப்பாடு அவர்களே தருவார்கள் அதற்கு 1200 திரஹம் நாம் கொடுக்கவேண்டும். சிலர் பலரை ஏற்றிக் கொண்டு ஒரு நபருக்கு 50 திரஹம் 100 திரஹம் என்று அழைத்துக் கொள்கிறார்கள்.நாங்கள் பேரம்பேசி 500 திரஹத்திற்கு தனி படகை அமர்த்திக்கொண்டு நாங்கள் மட்டும் மதியம் வெள்ளிகிழமை தொழுகை முடித்துக் கொண்டு 1.30 மணிக்கு படகில் புறப்பட்டோம்.பெரிய படகு காப்பகஆடைகளும் உண்டு நாம் குழந்தைகளுக்கு அணிவித்துக் கொள்வது நல்லது. படகு சுமாரனவேகத்துடன் சென்றது. காற்றும் அதே வேகத்தில் அடிக்க நமக்கு ஆனந்த பரவசம் தான். குறிப்பிட்ட தூரம் சென்றதும் விசில் அடிக்கிறார்கள். ஏன் படகோட்டி விசில் அடிக்கிறார்னு பார்த்தால் டால்பீன்களை கூப்பிடுகிறாராம். படகுபோகின்ற வேகத்துக்கு மூன்று டால்பீன்கள் வேகமாக தாவிதாவி வந்தது. நாங்கள் ஆரவாத்துடன் கைதட்டி உற்சாகப்படுத்தினோம்.குழந்தைகள் மிகவும் உற்சாகமடைகிறார்கள். சிறிது நேரத்தில் டால்பீன்கள் சென்று விடுகிறது பின் மீண்டும் நம்மைத் தொடர்கிறது. திட்டுதிட்டான மலைகள் அங்கு சில வீடுகள் இருக்கிறது படகோட்டி சொன்னார் பலஆண்டுகளாக அந்த மலையிலேயே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு மின்சாரம் கிடையாது மருத்துவம் கிடையாது. பள்ளிக்கூடம் கிடையாது இப்படி அத்தியவாச தேவைகள் ஏதுமில்லாமல் பழங்குடியினர் இன்னும் வாழ்ந்துக் கொண்டு வருகிறார்கள். என்று கூறினார். ஆலம் குறைவான இடத்தில் படகை நிறுத்தி காப்பக ஆடையனிந்து குளிக்கலாம் என்றார். நாங்கள் சென்றநேரம் மிதமான வெப்பம். குடல்நீரோ ஜில்லுனு இருந்தது இருந்தாலும் குளியல் என்பது எனக்கு அலாதியான இன்பம். குதித்து விட்டேன். என்குட்டிஸ்களுக்கு குளிக்க ஆசை…ஆலமாக இருந்ததால் அவர்களை இறங்க அனுமதிக்கவில்லை. எங்களைப்போன்று பல படகுகள் அங்கு குழுமின. அதில் நிறைய ஐரோப்பியர்கள் ஆண்களும் பெண்களுமாய் கும்மியடித்துக் கொண்டு குளித்தனர் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. அதை முடித்துக் கொண்டு மீண்டும் சவாரி மீண்டும் டால்பீன்கள் எங்களைத் தொடர சந்தோசமாக இருந்தது மாலை 5.30 மணிக்கு கரைவந்தோம்.
படகிலேயே நேரம் சென்று விட்டதால் மலைகளில் ஏறவில்லை. அங்கு தங்குவதற்கு அறைகளும் கிடைக்கிறது. முசுந்தம் கசப்பில் நல்ல உணவகங்களும் இருக்கிறது விமான நிலையம் இருக்கிறது. ரிசோர்ட் இருக்கிறது.சுற்றிப் பார்க்க இடங்களும் இருக்கிறது விடுமுறையைக் கழிக்க நல்ல இடம்.

வெப்பத்தின் தாக்குதல்லிருந்து இப்போது விடுபட்டுக் கொண்டிருக்கிறோம் ஆதலால் முசுந்தம்- கசப் சென்று வருவதற்கு ஏற்றநேரம் இது.

அமீரகவாழ் தமிழ் அன்பர்களே உங்கள் விடுமுறையை சந்தோசமாக கழியுங்கள்… உங்கள் பயணம் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்…!

வயசு பையன் குளிக்கிறான் பாருங்க....

Wednesday, October 7, 2009

சாந்தம் நிறைந்த சலாலாஹ்...4 (நிறைவு)


மிக உயர்ந்த மலையிலிருந்து தண்ணீர்; கொட்டுகிறது ஆனால் நாம் கை தட்டவேண்டும் அது உற்சாக மலைப்போல் இருக்கிறது.நாம் கைத் தட்டி உற்சாகப் படுத்தினால் நாம் குளிக்கலாம் . நான் கைத் தட்டினேன் சந்தோசமாக கொட்டிய தண்ணீரில் குளித்தேன் என் குட்டிஸ்களும் என்னுடன்.
எங்களுடன் இணைந்து வந்த மலையாளி குடும்பம் சலாலாஹ்வில் வாழக்கூடியவர்கள். இந்த மலையிலிருந்து கைத் தட்டும்போது அதிகமாக தண்ணீர் வரும் இப்போது குறைவாக கொட்டுகிறது என்று கூறினார்கள். கொஞ்சமாக கொட்டினாலும் கைத்தட்டினால் தண்ணீர் வருகிறது என்பதை பார்க்க முடிந்ததே அதுவே எங்களுக்கு போதும் என்றேன்.

அந்த மலைக்கு எதிரில் கடல் அலைஅதிகமாக இருந்தது கடல்கறையில் பல வண்ணங்களிவல் கூலாங்கற்கள் கிடந்தன. கடல்அலையில் அந்த கற்கள் தங்களுடைய நிறங்களை நமக்கு அழகாக்கி காட்டியது. அதனால் அந்த கற்களை அங்கேயே பார்த்து விட்டு வருவதற்கு மனமில்லை. என் குட்டிஸ்கள் ஆர்வத்துடன் கற்களை பொருக்க ஆரம்பித்தார்கள். அவர்களுடன் அனைவரும் பொருக்க பெரிய மூட்டையாகி விட்டது. இதை எப்படி தூக்கிச் செல்வது என்று எல்லோரும் சென்று தூக்கி வேனில் போட்டு ஆளுக்கு பாதியாய் பங்கிட்டுக் கொண்டோம்.

பின் அங்கிருந்து நபி சாலிஹ் அடக்கஸ்தளத்திற்கு சென்றோம். அது மலையின் உள் பகுதியில் இருக்கிறது. நடந்து செல்வதற்கு ரோடெல்லாம் போட்டிருக்கிறார்கள். அதை ஓமான் அரசு நிர்வகித்து வருகிறது.

நாங்கள் சென்ற பகல் நேரத்தில் யாருமே இல்லை. அந்த இடமே நிசப்பதமாக இருந்தது. இந்த இடத்தில் பெரிய பாம்புகள் இருந்ததாக கூறினார்கள். இப்போது இல்லையாம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களின் அடக்கஸ்தளங்களை எப்படி சரியாக அடையாளங்கண்டு பராமரித்து வருகிறார்கள் என்பது தெரியவில்லை. சில இடங்களைப் பற்றி திருக்குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது. அதுபோல் சாலிஹ் நபியின் வாழ்க்கை வரலாறும் குர்ஆனில் கூறப்பட்டிருக்கிறது. குர்ஆனை ஒதியதால் அதன் விளக்கங்களை வரலாறுகளை படித்ததினால் இந்த இடங்களை பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. அதேபோல் அய்யுப் நபி அவர்களின் அடக்கஸ்தளமும் அவர்கள் நோயிலிருந்து விடுபடுவதற்கு கிணற்று நீரால் தங்கள் உடலை சுத்தம் செய்த அந்த கிணற்றையும் பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது.

சாலிஹ் நபியின் அடக்கஸ்தளத்திலிருந்து புறப்பட்டு வரும் வழியில் மீன்பிடி இடமிருந்தது. அங்கு நின்று பலவகையான மீன்களை பார்த்தோம் விலை மலிவு. வாங்கி சமைப்பதற்கு இடவசதியில்லாததால் வருத்தத்துடன் புறப்பட்டேன்.

சலாலாஹ் ரோடுகளில் வாகனம் ஓட்டுவதற்கு மிக கவனம் தேவை. எந்த நேரத்தில் ஒட்டகங்கள் குருக்கே வரும் என்று சொல்லமுடியாது.

சிலர் அமீரகத்திலிருந்து தங்களின் சொந்த வாகனத்தில் சலாலாஹ் செல்கிறார்கள். அப்படி செல்லக்கூடியவர்கள் மிக கவனத்துடன் செல்லவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

மாலை சலாலாஹ் நகரம் வந்தோம் மேகமூட்டம் மலைகளின் பக்கம் இருந்ததால் ஓட்டுனரிடம் மீண்டும் அய்யுப் நபியின் அடக்கஸ்தளத்திற்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டேன். போறவழியில் நீர்வீழ்ச்சி இருக்கிறது அதில் தண்ணீர் இப்போது வரவில்லை இன்னும் சில தினங்களில் தண்ணீர் கொட்டும் இருந்தாலும் அந்த இடத்தை பார்க்கலாம் என அழைத்துச் சென்றார். தண்ணீர் கொட்டியதற்கான அடையாளமாய் அந்த பாறையில் கறைகள் இருந்தது.

அதற்கு பக்கத்தில் பெரிய பூங்காவை உருவாக்கி வருகிறார்கள். கிட்டதட்ட கொடைக்கானல் லேக் மாதிரியான இடம். நல்ல பசுமை நாங்கள் பார்க்கும்போது வேலைகள் நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. இதுவரையில் பூர்த்தி ஆகிஇருக்கலாம்.
அய்யுப் நபியின் அடக்கஸ்தளத்திற்கு மறுபடியும் செல்லும் போது மேகமூட்டம் குறைவாக இருந்தது. இந்த முறை பார்த்ததும் புறப்படவில்லை நீண்டநேரம் அங்கு அமர்ந்திருந்து கொஞ்சம் நடந்து சிலமணிநேரங்கள் அங்கு பொழுதை கழித்தோம். அது மனதிற்கு ஆனந்தமாக இருந்தது.

இரவு கடைவீதி சென்று பழங்கள் பொருட்கள் முக்கியமா அல்வா வாங்கினோம்.
அங்குள்ள கடைகளில் பெரும்பாலோர் ஒமானிகள் வேலைப்பார்க்கிறார்கள்.
சலாலாஹ்வின் வருமானம் கடல்மீன்களும் விசவாய வருமானமும் அதிகம்.

மறுதினம் மதியம் 3 மணிக்கு பேருந்து துபாய்க்கு புறப்பட்டது. ஒருவாரக்காலம் அங்கு தங்கியிருந்து மனதிற்கு மகிழ்வையும் பல வரலாற்று சிறப்புமிக்க இடத்தை பார்த்த திருப்தியும் ஏற்பட்டது.

நிறைவோடு மறுதினம் காலை 8.30 மணிக்கு துபாய் வந்து சேர்ந்தோம்.
சலாலாஹ் சுற்றுலா யாரும் செல்லலாம். துபாயிலிருந்து வாகனத்தில் செல்பவர்களுக்கு பெரிய சிலவு ஒன்றும் வந்துவிடாது. விமானத்திலும் செல்லலாம்.
செல்லக்கூடியவர்கள் சீசனில் சென்றால் கண்களும் மனமும் குளிரும்.
சென்றுவாருங்கள் உங்கள் பணயம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
நிறைவு.

அடுத்த பயணம் முஸந்தம் எழுதலாம் என்று இருக்கிறேன்.

Sunday, October 4, 2009

சாந்தம் நிறைந்த சலாலாஹ்...3

காலையில் மழைத்தூறலுடன் நாங்களும் சுற்றுவதற்கு தூறலானோம்…
கேரளத்து மன்னர் சேரமான் பெருமான் அவர்களுடைய அடக்கஸ்தலத்திற்கு கேரளத்து சகோதரர் வாகன ஓட்டுனர் எங்களை அழைத்துச் சென்றார். அந்த இடத்தைப் பார்த்ததும் என்னுடைய நினைவுகள் கேரளாவிற்கே அழைத்துச் சென்று விட்டது… ஆம் வாழைத்தோட்டம் தென்னந்தோட்டம் வெற்றிலைக்கொடி சீதாப்பழமரம் பப்பாளி தோட்டம் இப்படி தோட்டங்களாக அணிவகுத்து அழகுப்படுத்தி நின்றது.
சேரமான் பெருமான் மன்னர் தாஜ்தீன் என்றப் பெயரில் இஸ்லாமியரானார் என்றும் கூறினார்கள்.

சேரமான் பெருமான் மன்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை காண்பதற்காக கேரளாவை விட்டு கப்பலில் புறப்பட்டு நபி (ஸல்) அவர்களை கண்டு விட்டு வரும் வழியில் சலாலாஹ்வில் காலமானார்கள் என்று சுருக்கமாக வரலாறு சொன்னார்கள். அவர்களின் அடக்கஸ்தளத்தை சுற்றி சுமார் ஐந்து கிமீ தொலைவிற்கு கேரளாவைப்போல் பசுமையாக இருக்கிறது.


இதற்கும் பக்கத்தில் புல் பூண்டும் விளையாத கட்டாந் தரையாக இரண்டு கிமீ தொலைவிற்கு இருக்கிறது. இது திருக்குர்ஆனில் ஆதாரமாக உள்ள இடம் என்றார்கள்.
இறைவனுடைய கோபப்பார்வைக்கு ஆளாகி பூமியை புறட்டி போட்ட இடம் இன்றுவரையில் இந்த இடத்தில் எந்தவித செடிகளும் வளரவில்லை. அந்த இடத்தை சுற்றி முள்வேலிபோட்டு வைத்துள்ளார்கள். அதைப்பார்பதற்கும் வழிவைத்துள்ளார்கள்.

நான் அதைப்பார்ப்பதற்கு ஆவல் கொண்டேன். கேரளத்து சகோதரர் வேண்டாம் காரில் செல்லும்போதே பாருங்கள் என்று காரிலே சென்றுக் கொண்டே காண்பித்தார்.
பின் அங்கிருந்து சுமார் 50கிமீ தொலைவில் உள்ள மலைக்குன்றுக்கு அழைத்துச் சென்றார். இது யூசுப் நபியை கிணற்றில்போட்ட இடம் என்றார். ஆனால் அங்குள்ள பலகையில் ஆழமான பெரிய துவாரம் என்றுதான் எழுதியிருந்தது.

ஒரு கல்லை தூக்கி போட்டுப்பார்த்தேன். அது விழுந்த சப்தமே கேட்கவில்லை. சில ஆங்கிலேயர்கள் இந்த துவாரத்தில் இறங்கி இரண்டு தினங்கள் தங்கயிருந்து ஆராய்ச்சி செய்ததாக அன்நாட்டு பிரஜை ஓமானி கூறினார். அந்த இடத்தில் நல்ல வெப்பம் இருந்தது.
பின் அங்கிருந்து காந்த பாறைக்கு சென்றோம்… ரோட்டிலிருந்து மண்ரோட்டிற்கு வாகனத்தை செலுத்தினார் அது சமமான தளமாக இருந்தது. வாகனத்தை முழுமையாக செயலிழக்கவைத்தார். நாங்கள் ஆவலுடன் பார்த்தோம். செயலிழந்த வாகனம் தானாகவே நகரஆரம்பித்தது. மெல்ல மெல்ல நகர்ந்து 20 30 கிமீ வேகத்துக்கு ஒடியது. எங்களுக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. பலர் எங்களைப்போன்று அவர்களுடைய வாகனத்தையும் ஒடவிட்டு இரசித்தனர்.

பின் அங்கிருந்து பல்கீஸ் அரண்மனைக்கு சென்றோம் . அது பொட்ட பாலைவனத்தில் கடற்கரையோரம் இருக்கிறது. அதை ஒமான் அரசு பராமரித்து வருகிறது.அதனுல் செல்வதற்கு 10 திரஹம் நுழைவுக் கட்டணம் வசூல் செய்கிறார்கள். பல ஆயிரம் வருடங்களுக்கு முன் ஜின்களால் கட்டப்பட்ட கோட்டை என்கிறார்கள். அரண்மனையின் அஸ்திவாரம் மட்டுமே இப்போது காட்சியளிக்கிறது.
அரண்மனையையொட்டி கடல்கரை ஆறுபோல் அரண்மனையை உரசி கடல்நீர் ஓடுகிறது.
பின் அங்கிருந்து புறப்பட்டு பீச் சென்றோம். நாங்கள் மதியநேரத்தில் சென்றதால் ஆட்களின் நடமாட்டம் மிகக்குறைவு. சீசனில் திருவிழாப்போல் இருக்கும் என்றனர்.
கடல் அலைகள் மலைகளை மோதி மிக நீளமான துவாரங்கள் ஏற்பட்டிருக்கிறது. நாம் பாறைகளில் நிற்கும்போது சிறய சிறிய துவாரங்கள் வழியே கடல்நீர் பீறிட்டு அடிக்கிறது. நான் நனைந்தேப்போய் விட்டேன்.

நல்லக்காற்று கண்ணுக்கு எட்டியவரையில் மலையடிவாரம் மேகமும் கடலும் மயலயம் ஒன்றாக இணைந்து ஒரே புகைமண்டலமாய் காட்சித் தந்தது.
சில இடங்களில் வெப்பத்தையும் சில இடங்களில் குளிரையும் ஒரேநாளில் காணமுடிந்தது.
நகரத்தில் பல இடங்களில் அடக்கஸ்தளங்கள் அதிகம் காணப்பட்டன. அவைகளெல்லாம் வரலாற்று சிறப்புமிக்க வலிமார்கள் மகான்கள் நபிமார்கள் என புன்னிய மனிதர்கள் சலாலாஹ்வில் அடக்கமாகி உள்ளார்கள் அதனால்தான் என்னவோ அங்குள்ள சீதோசனம் இப்படி இருக்கிறது என்று தோன்றியது. இவ்வளவு அடக்கஸ்தளங்களையும் ஒமான் அரசு நினைவுச்சின்னமாக பராமரித்து வருகிறார்கள்.

சலாலாஹ்வில் வாழக்கூடிய ஒமானியர்கள் பெரும்பாலோர் விவசாயம் மீன்பிடிக்கும் தொழில் வாகன ஒட்டுனர்கள் இப்படி பலவித வியாபாரங்கள் செய்கிறார்கள். ஒமான் ஹல்வா பிரசித்தம் பெற்றது.
பலதரப்பட்ட மனிதர்கள் சலாலாஹ்வை சுற்றிப்பார்க்க வருகைப்புரிகிறார்கள்.
கேரளத்து சகோதரர்களின் உணவகங்கள் நிறைய இருக்கிறது. துபாயைவிட உணவு விலை அங்கு குறைவுதான்.
நகரில் நபி இம்ரானுடைய அடக்கஸ்தளம் பள்ளிவாசலுக்கு அருகில் பசுமைப்படுத்தி பூங்காவாக அமைத்து வைத்திருக்கிறார்கள். நீளமான அடக்கஸ்தளமாக இருந்தது.
மறு தினம் காலையில் சலாலாஹ்விலிருந்து சுமார் 200 கிமீ தொலைவில் உள்ள சாலிஹ் நபி அடக்கஸ்தளத்திற்கு புறப்பட்டோம். அங்கு வினோதமான மிக உயர்ந்த மலை இருக்கிறது நாம் கைதட்டினால் அந்த உயரத்திலிருந்து தண்ணீர் சொட்டுகிறது.
ஆமா… நான் அதில் குளித்தேன்… தொடரட்டும் குளியல்...!

Thursday, October 1, 2009

சாந்தம் நிறைந்த சலாலாஹ்...2

சலாலாஹ் அதுஒரு சுற்றுலாத்தளம். வளைகுடா கோடையில் சுற்றுபுற நாடுகளிலிருந்து பல லட்சமக்கள் இங்கு வந்து போகிறார்கள்.
வரலாற்று சின்னங்களும், அவதாரபுருஷர்களின் அடக்கஸ்தளங்களும் இங்கு இருக்கிறது.திருக்குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் சில ஆதாரங்கள் இந்த ஊரிலும் இருக்கிறது...
5000 ஆண்டு பலமைமிக்க பல்கீஸ் அரண்மனையும், ஆழ்கிணறு யுசுப் நபியை போட்ட கிணறும், அய்யுப் நபியின் அடக்கஸ்தளமும், அவர்கள் நோய்யுற்ற பொழுது உடலைசுத்தம் செய்து அந்த நீரிலிருந்து குணமடைந்த கிணறும், அதில் இன்றுவரையில் ஊறிக் கொண்டிருக்கும் நீரும், சாலிஹ் நபியின் அடக்கஸ்தளமும், இம்ரான் நபியின் அடக்கஸ்தளமும், கேரளத்து மன்னர் சேரமான் பெருமான் அவர்களின் அடக்கஸ்தளமும், அதைச்சுற்றி ஐந்து கிமீ தொலைவிற்கு கேரளாப்போன்றே காட்சியளிக்கும் அழகும், இவைகளுடன் காந்த மலையும்,ஆள் நடமாட்டம் அதிகமில்லாத அமைதியான அழகிய பீச்சும்,இப்படி பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது.
சுற்றி மலைகள் நடுவே சலாலாஹ் நகரம் மலையில் ஏறி நின்று இந்த நகரமுழுமையையும் பார்த்துவிடலாம்.

இங்கு இஸ்லாமிய வரலாற்று சின்னங்களாக அதிகம் இருக்கிறதே அதனால் இஸ்லாமியர்கள் மட்டும் செல்வவேண்டும் என்று எண்ணிவிட வேண்டாம்.
மலையின் மீது மோதி நம்மை போர்த்திக் கொள்ளும் போர்வை மேகங்களுடன் நாம் உறவாடலாம். அந்த சூழலில் நம் மனம் பெறும் அமைதியை வார்த்தை இங்கு தணிக்கைச் செய்துக் கொள்கிறது.

நாங்கள் துபாயிலிருந்து மதியம் பேருந்தில் புறப்பட்டோம். அல்அய்ன் பார்டர் வழியாக பேருந்து சென்றது… ஹத்தா பார்டர் வழியாகவும் செல்லலாம்.
இரவு உணவுக்காக இரண்டு இடங்களில் பேருந்து நிருத்தப்படுகிறது.
விடியற்காலை யெமன் நாட்டுக்கு செல்லக்கூடியவர்களுக்காக சலாலாஹ்விற்கு 100 கிமீ தொலைவிற்கு முன்னால் பேருந்து நிறுத்தம் இருக்கிறது .அங்கு அரைமணிநேரம் நிறுத்தம் உண்டு.
பின் அங்கிருந்து புறப்பட்டு மெல்ல மெல்ல மலையில் ஏறுகிறது சுமார் 25 கிமீ தொலைவு ஏறியிருக்கும் பாதையே தெரியவில்லை. மேகங்கள் வழிமறைக்க பேருந்து நின்றது. அந்தக்காட்சி ஆனந்தமாக இருந்தது… அதேநேரத்தில் மலைகளின் பல்லத்தாக்கை பார்த்தால் பகீர் உணர்வு…

நாங்கள் சென்ற நேரம் மிதமான மழை. அன்புடன் உங்களை வரவேற்கிறோம் எனச் சொல்வது போல இருந்தது.
காலை 9 மணிக்கு சலாலாஹ் வந்தடைந்தோம். எங்களுக்காக புதிய நண்பர் காத்திருந்தார். துபாய் நண்பர் மூலம் அறிமுகமானவர்.
நாங்கள் தங்குவதற்கு விடுதி ஏற்பாடு செய்திருந்தார். நாள் ஒன்றுக்கு 100 திரஹம்.
இன்னும் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் இந்த விடுதியின் வாடகை 500 லிருந்து 800 வரை நாள் ஒன்றுக்கு வசூலிப்பார்களாம்.
நாங்கள் சென்ற நேரம் சீசனின் ஆரம்பம். மதியம் வரையில் ஒய்வெடுத்துக் கொண்டு மதியத்திற்கு பின் புறப்பட்டோம்.
அங்கு பிரைவேட் டெக்ஸி அதாவது சொந்தமாக வாகனம் வைத்திருப்பவர்கள் அனுமதி பெறாமல் உறவினரைப்போல் அழைத்துப்போவார்கள்.அதிகமானோர் கேரளத்து சகோதரர்கள்.

மாலைநேரம் மேகமூட்டங்கள் மலைகளை மோதிக்கொண்டு நின்றன… அந்த மலைகளை நோக்கி எங்கள் வாகனம் சென்றது. ரோடெல்லாம் கோலம்போட தண்ணி தெளித்ததைப்போல் ஈரமாக இருந்தது. மேகம் சூழ்ந்துக் கொண்டதால் முன்னால் செல்லக்கூடிய வாகனத்தையும் எதிரே வரக்கூடிய வாகனத்தையும் பார்ப்பது கடினமாக இருந்தது…
மலையில் சின்ன சின்ன கடைகள் இருந்தன… அங்கே ஒட்டகங்களின் கறி டிக்காவாக சுட்டு விற்கப்படுகிறது.

நகரிலிருந்து இந்த மலைக்கு 30 நிமிடங்களில் சென்று விடலாம். துபாய் வாகன நெரிசல் போல் அங்கு இல்லை.
அந்த மலையின் மேல் சென்றதும் குளிர்ந்தது… முதலில் நபி அய்யுப் அவர்களின் அடக்கஸ்தளத்திற்கு சென்று பார்த்தோம்… அவர்களின் வரலாறு என்நினைவுக்குள் நிழலாடியது. அருகில் பள்ளிவாசலும் வரக்கூடியவர்கள் ஒய்வெடுக்க கூடாரங்களும் இருந்தன.

மலைகள் பசுமையாக இருப்பது மூன்று மாதத்திற்கு மட்டுமே என்கிறார்கள்.
பச்சை நிற சேலையைக் கட்டியதுபோல மலைகள்.
நபி அய்யுப் அவர்கள் குளித்த கிணறு மலையின் அடிவாரத்தில் இருந்தது. அங்கு வாகனங்கள் செல்வதற்கு அப்போது தான் வழிகள் அமைத்துக் கொண்டிருந்தார்கள். (இதற்கு முன் மலையிலிருந்து கயிறுக்கட்டி அதன் வழியாக இறங்கி பார்க்கவேண்டுமாம்) ஆதலால் நடந்தோம் கிணறு நம்ம ஊர் கிணறு போல் இல்லை. சிறு குட்டைமாதிரி தற்போது இருக்கிறது. மலைகளின் துவாரங்களிலிருந்து நீர் வருகிறது. அந்த தண்ணீரை பாட்டல்களில் பிடித்து குடிக்கிறார்கள். சிலர் புனிதமாக எண்ணி சிலர் தாகத்திற்கு ஆக தண்ணீர் குடித்தார்கள் நானும்.


சிலமணி நேரங்கள் அங்கிருந்து விட்டு வரலாற்று மனிதப் புனிதர்களின்
அடக்கஸ்தளங்களை பார்க்கச் சென்றோம்.

பாரத்துவிட்டு மற்ற இடங்களை காலையில் சென்று பார்க்கலாம் என விடுதிக்கு சென்று விட்டோம்.