உங்கள் வருகைக்கு நன்றி...

Saturday, August 29, 2009

ஷார்ஜாவில் அமீரகப் பதிவர்களின் இப்தார் நிகழ்ச்சி

பதிவர்களின் இப்தார் நிகழ்ச்சி ஷார்ஜாவில் அண்ணாச்சி (ஆசிப்மீரான்) வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப்தார் (நோன்பு திறக்கும்) நேரம் மாலை 6.45 மணிக்கு. ஆனால் 4மணிக்கே கீழைராஸா கிளம்பனும்னாரு… நான் அவசரமா கிளம்பினேன். என் கை வண்ணத்தில் செய்த கலவை காய்கறிகள் (சேலட்) தூக்கிக் கொண்டு கிளம்பினோம்.
போகின்ற வழியில் ஹரீஸ் (கறிக்களி) அரபிகளின் விஷேச உணவு…வாங்கிக் கொண்டு முக்கியமான ஐட்டம் பிரியாணி, நோன்பு கஞ்சி , சம்புசா இவைகளுடன் வாஹித், சிம்மபாரதி ராஜாகமால் (நாசர்), கீழைகீர்போட அதில் நானும் அமர்ந்து கிளம்பினோம்.
போற வழியில ஒரே புலம்பல்…
என்னான்னே…
கட்லெட் கிடைக்கலயாம்…
எதையும் முறையாக செய்யனும்னு கீழைராஸா ஒரு கொள்கை வச்சிருக்காரு…அந்த கொள்கைக்கு மாற்றமா எது நடந்தாலும் ஆளு பரதநாட்டியம்தான்.

கோகில் மேப்பை கையில் வைத்துக்கொண்டு ஷார்ஜாவிற்கு வாஹித் வழித்தேட கீழை சொன்னாரு …
கோகில்மேப்பை பார்த்தா உமக்கு என்னாத் தெரியும் வழிச்சொல்ற மெயிலை படிய்யான்னாரு… மடி நிறைய சாமான்களோடு திணரிக்கொண்டிருந்த வாஹித்து அடுத்த தாளை சிரமத்தோடு எடுத்து கீழைக்கிட்ட காண்பிக்க …
இது கொஞ்சம் ஒவரயில்ல … நான்தான் காரு ஓட்டுறேனில்ல படிச்சு சொல்லுப்பா…! என்றதும்
வாஹித் பட்டிமன்ற தோரணையில் வாசிக்க ஆரம்பித்தார்…
போதும் நிறுத்துன்னாரு…
யான்… வாஹித் கேட்க…
பட்டிமன்ற டயலாக்கெல்லாம் வேணாம்னு அந்த தாளை பிடிங்கி சிம்மபாரதிக்கிட்ட கொடுக்கப்பட்டதும்…
அவர் ஒருமாதிரியா உருமிக்கிட்டே படிச்சு இடத்தை கண்டுப்பிடிச்சு காரையும் சரியான இடத்தில் நிறுத்தி ஆளுக்கொரு சாமான்கள் என்று கணக்குபோட்டு கையில எடுத்து போய் சேர்ந்தோம்.

அண்ணாச்சி வாசல்லயே காத்து நின்னாரு
அட…இன்னா பாசம்டா மனுசனுக்கு வாசல்லயே நிக்கிறாரேன்னு நினைச்சேன்.
பிரியாணி, நோன்பு கஞ்சியெல்லாம் வந்துச்சான்னாரு…
அப்பத்தான் எனக்கு பாசம் புரிஞ்சது.
கத்திரிக்காய் பச்சடின்னா அண்ணாச்சிக்கு ரொம்ப பிடிக்குமாம்…
கையில அல்வாவை வைத்துக் கொண்டு இது என்ன அல்வாவான்னாரு… அல்வாவை அல்வான்னு சொல்வது பெரிய விசயமா…?
நான் சொன்னேன் இது கத்தரிக்கா பச்சடின்னு…
அண்ணாச்சிக்கு சந்தேகம்… முகந்துவேற பார்த்து இது அல்வாதான்னு முடிவுக்கு வந்தாரு…
அண்ணாச்சி வீடு பெருசு அவரு மனசு மாதிரிதான் இருந்துச்சு…
நோன்பு கஞ்சியை நான் ஊற்றிக் கொண்டிருக்கும்போது ஜெசிலா வந்தாங்க… அடுக்கலையில் என்னைப் பார்த்து விட்டு … எழுந்திறிங்கண்ணா நான் செய்யிறேன்னு சொன்னதும்
இல்லமா… நானே செய்யிறேன்னு சொன்னதும் அவங்க பழங்கள் நறுக்க சென்றுவிட்டார்கள்.
ஆனா அண்ணாச்சி மட்டும் என்மேல ரொம்ப பாசமா இருந்தாரு …

சூட்டுல நின்னு ஏன் கஸ்டப்படுறீங்க … ஹாலில் ஏஸியில் வைத்து செய்யுங்களேன் என்றார்.(இதுல உள்குத்து ஏதும் இருக்குமான்னு தெரியல)
கீழைராஸா மட்டும் சரியா ஒவ்வொன்னையும் புகைப்படம் எடுத்துக்கிட்டு நின்னாரு…ஒரு சின்ன வித்தியாசம். சென்ற பதிவர் கூட்டத்தில் அமைதியாக அமர்ந்திருந்த கீழை…இங்கே அமைதியிழந்திருந்தாரு.
ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள்…

முதல்ல இப்தாரை முடிச்சுக்குவோம்…அப்புறம் அறிமுகம்…
6.45க்கு வந்தவங்க எல்லாரும் நோம்பு வைத்தவர்களுடன் கலந்து நோன்பு திறப்பு…சுறுசுறுப்பாக நடந்தது.
பின் அங்கேயே மஹரிப் தொழுகை நடத்தப்பட்டது… தொழுகைக்கு பின் அனைவரும் வட்டமாக அமர…

நடுமத்தியில் அண்ணாச்சி அமர்ந்து ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.
சென்ற பதிவர் நிகழ்ச்சிக்கு வராத சிலர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள்.
அதில் நண்பன் மற்றும் முத்துக்குமரன் ராஜாகமால் மற்றபடி எல்லோரும் பழைய முகம்தான்னு நினைக்கிறேன்.
இந்த நிகழ்ச்சியில் பெண்பதிவர்களும் கலந்துக் கொண்டார்கள்.ஜெசிலா....படகு...

ராஜாகமாலின் பூத்து மகிழும் பூக்கள் - என்ற கவிதை நூல் அங்கு வெளியிடப்பட்டது.
முதல் பிரதியை நண்பன் பெற அதைத் தொடர்ந்து அண்ணாச்சி சுல்தான் பாய் ஜெசிலா அவ்வளவுதான்...!

அறிமுகமும் நூல் வெளியிடும் முடிந்ததும் சிங்கை நாதனுக்கு உதவி செய்த அத்தனை உள்ளங்களையும் நன்றி பாராட்டினார்…
ஜெகபர் என்ற முகம்தெரியாத நபர் அண்ணாச்சி வங்கி கணக்கில் 2000 திரஹம் செலுத்தியிருந்தது நெகிழ்வை தந்தது . மெயில் வந்த செய்தியை மட்டும் படித்துவிட்டு உதவி செய்த அந்த மனிதர் உண்மையில் மாமனிதர்தான்.
ஏதோ ஒரு நாட்டில் வாழ்கின்ற ஒரு பதிவருக்கு உயிர் பிரச்சனை என்றதும் கூடுமானவரை பல பதிவர்கள் அந்த உயிருக்கு உயிர்கொடுக்க எழுந்தருளி நின்றார்களே நிற்கின்றார்களே… அவர்களை எந்த வார்த்தையாலும் வாழ்த்த முடியாது… பதிவர்களில் மனிதர்களை பார்க்க முடிகிறது…
முழு முயற்சி எடுத்து தொகைகளை வசூல் செய்து அனுப்பி அவ்வபோது சிங்கை நாதனின் தகவலை எத்திவைத்துக் கொண்டிருக்கும் அண்ணாச்சி அவர்களுக்கு அமீரக பதிவர்கள் சார்பாக பாராட்டும் நன்றியும் சமர்பிக்கின்றோம்.

சினிமா உரையாடலை பலரும் ஆரம்பிக்க பலவிதமான விமர்சனங்கள் காரம் சாரமாக நடைப்பெற்றது. இது ஒரு ஒன்றுக்கூடல் நிகழ்ச்சி என்றாலும் இன்னும் நாம் கல்யாண வீட்டு விருந்தினராகத்தானிருக்கிறோம்.
இன்னும் எவ்வளோ விசயங்கள் எவ்வளவோ கருத்துக்கள் கலத்திற்குள் வராமலேயே காத்திருக்கிறது…!

அண்ணாச்சி வீட்டு புத்தக அலமாரி மீது ஒரு கண்ணு... இந்த தபா தப்பிசுடுச்சு... அடத்ததபா....ம்...சொல்லுற பழக்கம் நம்மகிட்ட கிடையாதுங்க...

இப்தாரில் கலந்துக் கொள்ள பெயர் தெரிவித்தவர்கள்.
1)ஆசிப் மீரான்
2)ராசாகான்
3) செந்தில்வேலன்
4)முத்துகுமரன்
5)நாஞ்சில் பிரதாப்
6)கலையரசன்
7)கிளியனூர் இஸ்மத்
8)சரவணன்
9)சுபைர்
10)ஆசாத்
11)சுல்தான்
12)ஆதவன்
13)கோபி
14)சென்ஷி
15)லியோ
16) ராஜாகமால் (நாசர் )
17)நரசிம்மராசா (சிம்மபாரதி)
18)அப்துல் வாஹித
19) ராட் மாதவ்
20) தினேஷ்
21)ஜெசிலா+ ரியாஸ்
23)நௌஃபல் + ஜஸீலா
25) சஃபீனா + பாபு
26) கார்த்திகேயன்
27) நண்பன் ஷாஜி
28) சுந்தர் குடும்பத்துடன்
29)சிவராமன்
30)சுரேஷ்
ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் கலந்துக் கொண்டார்கள்.

இந்த பதிவர் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க பெரிதும் பாடுபட்ட கிழக்கில் உதித்தலும் சூரியன் சூரியன்தான் கீழக்கரையில் உருவானாலும் கீழைராஸா ராஸாதான்…(ரொம்ப வச்சுட்டேனோ) அவரின் ஏற்பாட்டில் மிக சிறப்பாக இந்த நிகழ்வு நடந்தேறியது…

Wednesday, August 26, 2009

மனம் கவர்ந்த மலேசியா...17

மாலை 6 மணிக்கு சொன்னாமாதிரி வந்தார் ரெஜாக்… வரும்போதே என் குட்டிஸ்களுக்கு போர் அடிக்காம இருக்க அவருடைய குட்டிஸையும் அழைத்து வந்தாரு .
அவங்களுக்கு ஜோடி சேர்ந்த சந்தோசத்துல காரிலேயே ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டாங்க… கேஎல் ரொம்பவும் நெரிசலான ஊருங்க …
இங்கு புதுசும் பழசும் கலந்திருக்கு கிட்டதட்ட எங்க துபாய்மாதிரி தான். (துபாயிலதான் பழைய வில்லாக்களை இடிக்கிறாங்களே) டிராபிக் அதிகம் பெரிய பெரிய உயரமான கட்டிடங்கள், மினாரா , டுவின் டவர், பள்ளிவாயில் ,கோயில், நட்சத்திர ஹோட்டல்கள், இப்படி நிறைய்ய … நாங்க முதல்ல மலேசியா மினரா போனோம்.

இந்த மினாரா மலேசியாஉடைய டெலிகம்முனிகேஷேன் டவர்னு சொல்கிறார்கள். இந்த மினரா 1996-ல் கட்டி முடிக்கப்பட்டதாகும். இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 515 மீட்டர் அளவாகும். இது உலகில் நான்காவது உயரமான டவரில் ஒன்றாக விளங்கி வருகிறது. அதன் உள்ளே செல்வதற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பெரிதும் ஆர்வப்படுகிறார்கள்.
நாங்கள் செல்லும்போது கூட்டமாகத்தான் இருந்தது. லிப்டில் ஏறும்போது அது மேலே உயரும்போது காதுகள் அடைக்கிறது…

450 மீட்டர் உயரத்தில் நின்றுக் கொண்டு முழு கேஎல் நகரத்தையும் நம்மால் பார்க்க முடிகிறது. இன்னும் ரசித்து பார்ப்பதற்கு பைனாகுளோர் வைத்திருக்கிறார்கள் அதன் வழியே ஒவ்வொரு உயரமான கட்டிடங்களையும், மார்க்கெட்டையும் பார்த்து ரசிக்கலாம். நாங்கள் நின்ற 450 மீட்டர் உயரத்தையும் தாண்டி ஸ்டார் உணவகம் இருக்கிறது. அதில் சென்றுவர முன்கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும் .

நாங்கள் மாலை நேரம் என்பதால் சூரியனின் அஸ்தமனத்தை மினாராவிலிருந்து காண முடிந்தது. மினாரா டவரிலிருந்து டுவின் டவரைப் பார்பதற்கு மிக அழகாக இருக்கிறது… வரக்கூடியவர்கள் இந்த இடத்தில் நின்று தான் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். இதற்காகவேண்டி பிரித்தியோகமாக புகைப்படக் கலைஞர்கள் தங்களின் உயர்ரக கேமராவுடன் காத்து நிற்கிறார்கள். நீண்ட நேரம் அங்கு நின்றோம்… குட்டிஸ்கள் இதைப்பார்த்து பிரமித்தார்கள். அங்கும் ஜாலியான விளையாட்டுதான்… சில மணிநேரங்களில் கீழே இறங்கினோம்.

கீழே ஒரு சின்ன மிருக காட்சிசாலை மாதிரி பாம்பு, குரங்கு ,என சில வகை மிருகங்கள் வைக்கப்பட்டிருந்தது… அதில் இரண்டு குரங்கு குட்டிகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டதை எனது கைபேசியில் படம் பிடித்தேன். எனது சின்னமகள் மிக கவனமாக தூரத்தில் நின்று குரங்கு சண்டையை ரசித்தாள். காரணம் பினாங்கு அனுபவம்.அதை வேடிக்கை பார்த்து விட்டு கிளம்புவதற்குள் நன்றாக இருட்டிவிட்டது.

டுவின் டவரை பார்பதற்கு சென்றோம் காரை நிறுத்துவதற்கு இடவசதி இல்லை. நாளை வரலாம் என்றார். இந்திய மார்க்கெட் பக்கம் சென்றோம். ஷாப்பிங் கொஞ்சம் செய்தோம். பின் அங்கிருந்து 10 கீமி தொலைவில் உள்ள எனது மனைவியின் உறவினர் ஒருவரைப் பார்க்க சென்றோம். அவர் பெரிய உணவகத்தில் பணிப்புரிகிறார்.
பல வகையான மலாய் உணவுவகைகளை கொண்டு வந்து வைத்தார்.
ம்…நல்ல டேஸ்ட்டுங்க… நான் நல்லா கட்டினேன்…

மறுநாள் காலை ஜென்டிங் ஐலாண்ட் போகனும் சீக்கிரம் தூங்கலாம்னு ஹோட்டலுக்கு வரும் போது இரவு 10 மணிங்க…
காலையில 8 மணிக்கு கிளம்பி நம்ம டைவர் ரெஜாக் அண்ணன் அவங்க சாப்பாட்டு கடைக்கு அழைத்துப்போய் புரோட்டா மீன் குழம்பு வைத்து காலை டிபன் தந்தாரு …
காலையிலேயே மீனா…ன்னு கேட்டேன். கோழி இறைச்சி எதுவேணும்னாரு…
நான் காலையில சைவம்ங்க… மதியம் இரவு மட்டும் அசைவம்ங்கன்னே…
நம்ம கடையில சைவமும் அசைவமும் கலந்து தான் இருக்கும் தனித்தனியா இருக்காதுன்னாரு… பரவாயில்லைன்னு சாப்பிட்டேன்.
அவருடைய சாப்பாட்டு கடை ரோட்டின் ஒரத்தில் நம்மஊரு ஸ்டைலில்தான் இருந்துச்சு…நம்ம ஊரு கிராமத்து சாயாக்கடை மாதிரி … அவரு அவருடைய மனைவி அவருடைய குழந்தைகள்ன்னு குடும்பமே வேலைப்பார்க்கிறார்கள்.
அதிக படிப்பு இல்லாததால் பல வேலைகளை செய்து குடும்பத்தை காப்பாற்றக்கூடிய சூழ்நிலையில்தான் அவர்களின் வாழ்க்கை இருக்கிறது.
தமிழ்நாட்டில் மயிலாடுதுறைக்கு அருகில் அவர் பிறந்த ஊராக இருந்தாலும் அடிக்கடி சென்று வருவதற்குரிய சாத்தியம் இல்லை என்கிறார். கடைசியா ஊர்போய் வந்து பத்து ஆண்டுகளை கடந்துவிட்டது என்கிறார். ஆனால் அவருடைய குடும்பம் மலேசியாவில் இருப்பதால் அவருடைய குழந்தைகளுக்கு தாய் நாடு மலேசியாவாகவே இருக்கிறது.
அவர்கள் இந்தியாவை பார்ததே இல்லையாம். நீங்கள் இந்தியா போகவில்லை என்பதற்காக எங்கே தமிழ் தெரியாது என்று சொல்வீர்களோன்னு நினைச்சேன்…ஆனாலும் உங்க குழந்தைகள் நன்றாக தமிழ் பேசுகிறார்கள்…
என் பிள்ளைகளுக்கு நான்கு மொழி தெரியும் என்று கூறினார். அரைடஜன் குழந்தைகளுக்கு தந்தையாக இருந்தாலும் அந்த குழந்தைகள் மீது அவர் வைத்திருக்கும் அன்பை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது. காலை டிபன் முடித்துவிட்டு அவருடைய இரண்டு குட்டிஸ்களையும் அழைத்துக் கொண்டு ஜென்டிங் ஐலேண்ட் புறப்பட்டோம். கேஎல் நகரத்தில் சரியான சூடு இருந்து. வெக்கை அதிகமாகவே இருந்தது காரின் ஒட்டத்தில் அது தனிந்தே இருந்தது…
இதோ ஜென்டிங் ஐலேண்ட் மலைமீது எங்கள் கார் ஏறிக் கொண்டிருக்கிறது…

நோன்பு திறக்கனும் ஒரு சின்ன கேப்புல இந்த பதிவு…மீண்டும் சந்திப்போம்…!

Monday, August 24, 2009

படிக்கவேண்டிய பதுமை - (சிறுகதை)

அழைப்பு மணி அலறியது –
அடுக்கலையில் வேலையாயிருந்த லைலா அப்படியே போட்டு விட்டு கதவைத் திறந்தாள்.

கையில் கடிதத்துடன் ஜூனைதா நின்றுக் கொண்டிருந்தாள் .

வாடி ஜூனைதா நல்லாயிருக்கியா என்னைக்கும் இல்லாம இன்னைக்கு திடிர்னு வந்திருக்கே என்ன விசயம் ?

உன்னை பார்த்திட்டு போகலாம்னு தான் வந்தேன் பதிலுரைத்தாள் ஜூனைதா.

ஏய் பொய் சொல்லாதே ! அது என்ன கையில-லட்டரா? யாரிடமிருந்து வந்திருக்கு?-உட்காரு-என்றாள் லைலா.

சோபாவில் அமர்ந்தபடி ‘உம் மச்சான் போட்டிருகாரு-கொஞ்சம் படிச்சுக் காட்டேன்’-என்றாள் ஜூனைதா.

‘அதானேப் பார்த்தேன் அம்மா சும்மா வரமாட்டாங்களேன்னு…கொஞ்சமென்ன பூராவையும் படிச்சுக் காட்டுறேன் இருடி அடுப்புல ஆணமிருக்கு இறக்கி வச்சிட்டு வந்துடுறேன்.-ஒரு மெல்லிய புன் சிரிப்பை உதிர்த்து விட்டு அடுக்கலைக்குள் சென்றாள் லைலா.

சோபாவில் அமர்திருந்தவாறே தன் பார்வையை அந்த ஹாலில் மேய விட்டால் ஜூனைதா.

பெரிதும் சிறிதுமில்லாத கணகச்சிதமான அறையாக இருந்தாலும் வைக்க வேண்டிய இடத்தில் பொருட்களை வைத்திருப்பது ரசிக்குமளவு அழகைத் தந்நது. தன் வீட்டிலும் இப்படி பொருட்களை ஒழுங்குப்படுத்தி வைக்க வேண்டும்மென அவள் மனம் எண்ணியது.

சில வினாடிகளுக்குப் பின் காபியுடன் லைலா ஹாலில் தோன்றினாள்.

எதுக்குடி இப்பக் காபி –என்றாள்

குடிக்கத்தான் ! வந்த விருந்தாளிக்கு இது கூட கொடுக்கலேன்னா என்ன மரியாதை இருக்கு –என கூறிய வாறு அவளிடம் காபியை நீட்ட மறு ஆட்சேபனை செய்யாமல் பவ்யமாய் காபியை ஜூனைதா வாங்கிக் கொண்டாள்.

கொடு லட்டர படிச்சுக் காட்டுறேன் ! –என ஜூனைதா இடமிருந்து கடிதத்தை வாங்கி பிரித்துப் படித்தாள்.
ஆரம்ப வரிகள் வர்ணணையில் துவங்கியிருந்ததால் நாணத்துடனும் புன்சிரிப்புடனும் லைலா படித்துக் காட்டிய போது ஜூனைதா வெட்கித்துப் போனாள்.சில சில்மிசமான விசயங்களை அவள் படித்த போது ஜூனைதா கூனி குறுகினாள்.

என்ன மனுசன் இவரு இப்படியா கடிதத்துல எழுதுவாங்க-என ஜூனைதாவின் வெளி மனம் கசந்தாலும் அவளின் உள் மனம் அதை விரும்பியது ஆனால் தான் படித்து ரசிக்க வேண்டியதை பிறரை விட்டு படித்து கேட்கும் போது அவள் மனம் சஞ்சலப் பாடாமலில்லை.

கடிதத்தை ஒரு வழியாய் லைலா படித்து முடித்த பின் அந்த லட்டருக்கு இப்பவே பதிலும் எழுதிடலாமா ?-

என்று –ஜூனைதா கேட்டபோது மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் -எழுதிடலாம் -என தாளையும் பேனாவையும் தாயார் செய்துக் கொண்டாள் லைலா.

ஜூனைதா சொல்ல சொல்ல லைலா எழுதினாள்.ஆனால் வந்தக் கடிதத்திற்கும் இப்போது பதில் எழுதும் கடிதத்திற்கும் நிறைய்யவே வேறுபாடு இருப்பதை லைலா உணராமலில்லை.




ஜூனைதா தயங்கி தயங்கி ஒவ்வொரு விசயமாய் யோசித்து கூறியபோது லைலா அவளின் மனதை முழுவதுமாய் புரிந்துக் கொண்டாள்.

பதில் எழுதி முடித்தப் பின்-
ஜூனைதா ! நான் சொல்றேன்னு தவறா நினைக்காதே ! ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் மனம் விட்டு எல்லாவற்றையும் பேசலாம் ஆனால் சில விசயங்களை தவிர.உன் கணவர் சுதந்திரமா உனக்கு எழுதியது மாதிரி நீயும் எழுதனும்னு விரும்புகிறாய் ஆனால் சில குடும்ப விசயங்களை இன்னொருத்தியிடம் கூறி கணவருக்கு கடிதம் எழுதுவதை உன் மனம் தடைப்போடுது அதே நேரத்துல அப்படி தன்னால எழுத முடியவில்லையே என்ற ஏக்கமும் உன் மனதை ஆட்கொள்ளுது இதை உன்னால மறுக்க முடியாது .

நம்ம சமுதாயத்துல நீ மட்டுமல்ல எத்தனையோ பெண்களின் நிலை இப்படித்தான் இருக்கு. இதற்கு காரணம் கல்வியறிவு இல்லாமப் போனது தான் ஒரு ஆண் மகனை படிக்கவைக்கிற அளவிற்கு ஒரு பெண்பிள்ளையை படிக்கவைப்பதில்லை.

ஒரு பொண்ணு வயசுக்கு வந்துட்டாள்னா அந்த பொண்ணோட பெற்றோருக்கு ஒரே லட்சியம் அவ கல்யாணம் தான்.

உன்னோட வாழ்க்கை லட்சியம் கல்யாணம் தான்னு அந்த பொண்ணுக்கும் உணர்தப்படுகிறது அவ அதை நோக்கியே சிந்திக்கிறா கனா காண்கிறா.

தனது பெண்ணுடைய வாழ்க்கையைப் பற்றி நினைத்துப் பார்க்கின்ற பெற்றோர்கள் அவளைடைய கல்வியைப் பற்றி கொஞ்சம் கூட நினைத்துப் பார்ப்பது கிடையாது.

வாழப்போற பெண்ணுக்கு படிப்பு எதுக்குன்னு பள்ளி படிப்பை பாதியிலே நிறுத்தக் கூடியவர்களும் பள்ளிக்கே அனுப்பாத பெற்றோர்களும் இந்த சமுதாயத்துல இருக்கத்தான் செய்யிறாங்க
ஓரு பெண்ணுக்கு மார்க்க அறிவு எவ்வளவு முக்கியமோ அதேயளவு உலக கல்வியறிவும் மிகமிக முக்கியம்.

புகுந்த வீட்டுக்கு போறவ அங்கே வேலைக்காரியாகவும் புருசனுக்கு மனைவியாகவும் ஒரு இயந்திரமா வாழ்றதுல சந்தோசமும் இன்பமும் அவ வாழ்க்கையிலே நிலைத்திடும்னு கற்பனை செய்யிறது முட்டாள் தனம்.
தான் பெற்ற பிள்ளை அது என்ன படிக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ளவதிலும் அவர்களின் படிப்பில் ஏற்படக்கூடிய சந்தேகங்களை நிவர்த்தி செய்வதிலும் எவ்வளோ சந்தோசமிருக்கு...

பட்டம் பெற்ற கணவனுக்கு ஆறாம் வகுப்பு தாண்டாத ஒருமனைவி கிடைக்கிறப்ப அவனோடு சரிக்கு சமமா அவனுடைய ஆபிஸ் பிரச்சனைப்பற்றியோ குடும்பப் பிரச்சனைப்பற்றியோ சமுதாய பிரச்சனைப்பற்றியோ ஒரு நாட்டுடைய பிரச்சனைப்பற்றியோ வாதிடவோ அல்லது ஆலோசனை கூறவோ முடியாமப்போயிடுது .

அந்த மாதிரி நேரத்துல தன் கணவனே அவனுடைய பிரச்சனைப் பற்றி அவளிடம் வாதிடமாட்டான் காரணம் அவள் தான் படிப்பறிவு இல்லாதவளாச்சே.சொல்லித்தான் என்னவாகப் போகுது சொல்லாம இருந்தால் தான் என்ன பயன் கிடைக்கப் போகுது. என்று லைலா மென்னையோடு கூறி ஜூனைதாவை பார்தபோது சோகமாக அமர்திருந்தாள்.

ஜூனைதா நான் உன்னை உதாரணம் காட்டி பேசறதா நினைத்து வருத்தப்படாதே நீயும் நானும் சுய சிந்தனையாய் இந்த வயசுல கல்வியை நினைத்து வருத்தப் படுவதை நமது பெற்றோர்கள் நாம சின்னப் பிள்ளையாக இருக்கும் போது வருத்தப்பட்டிருந்தாங்கன்னா உனக்கும் உன்னை போலுள்ள பெண்களுக்கும் இந்த நிலமை ஏற்பட்டிருக்காது.
படித்தப்பெண் குடும்பத்தை சிறப்பான முறையில் நடத்த முடியும்.
அதனால் தான் படித்த பெண்களை பல்கலைக்கழகத்திற்கு சமமாக ஒப்பிடுகிறார்கள்.

என்று கூறி முடித்த போது ஜூனைதா அவளையே உற்றுப்பார்தாள்.
அந்த பார்வையில் அவளின் வம்சத்தின் எதிர்காலம் பிரகாசமாக தெரிந்தது. . . . . .!

Sunday, August 23, 2009

மனம் கவர்ந்த மலேசியா...16

அதிகாலை 5 மணிக்கே எழுந்து எல்லாக்கடன்களையும் முடித்து விட்டு பினாங்கிலிருந்து பட்டர்வொர்த் இரயில் நிலையம் வந்தோம் .
இரயில் நிலயத்தில் கூட்டம் அதிகம் இருக்கவில்லை. காலை இரயில் என்பதால் கூட்டம் குறைவு என்றார்கள். இந்த இரயில் பட்டவொர்திலிருந்து சிங்கப்பூர் செல்கிறது. காலை 7.30மணிக்கு புறப்பட்டு இரவு சிங்கைக்கு 9.30 மணிக்கு சென்றடைகிறது.
இரவு இரயிலில் பயணச்சீட்டு கிடப்பதே சிரமம். சில தினங்களுக்கு முன்பாகவே பதிவு செய்து வைக்க வேண்டுமாம்.
பெரும்பாலோர் சொகுசு பேருந்தில் தான் பயணிக்கின்றார்கள். இதனால் கால அவகாசம் மிச்சமாகிறது குறித்த நேரத்தில் சென்று விடலாம் இரயில் மெதுவாகத்தான் செல்லும் அவ்வளவு வேகமிருக்காது நேரம் அதிகம் சிலவாகும்.

முதல்வகுப்பு இருக்கையில் பதிவு பண்ணியிருந்ததால் எனது குட்டிஸ்களுக்கு விளையாட ரொம்பவும் ஜாலியா பீல் பண்ணினாங்க… ஏன்னா முதல்வகுப்பு இருக்கையில எங்களத் தவிர வேறு யாரும் இல்லை.

எங்களை வழியனுப்ப எனது மைத்துனர் அவரது குடும்பமும் வந்தார்கள். எனது மைத்துனருக்கு ஒரு பெரிய வருத்தம் ஒருமாசம் முழுசா பினாங்கில் தங்கனுமாம்
அதனாலென்ன இன்னொரு சுற்றுலா வந்திடுகிறேன் என்றேன்.
அவருக்கு நம்பிக்கை இல்லை… இந்த வருகையே மூனு வருசமா சொல்லி இந்த வருசம் தான் வந்தீங்க ன்னார்…
மதியம் 2 மணிக்கு தான் கோலலம்பூர் போய்சேரும் … இரயில் நிலையத்தை விட்டு வெளியில் வந்ததும் உங்களை அழைக்க ரெஜாக் என்ற நண்பர் காத்திருப்பார். அவர் நீங்க தங்குவதற்கு ஹோட்டல் ஏற்பாடு செய்து தருவார் மற்றபடி சுற்றி பார்க்க அவருடைய காருக்கு மூன்று தினங்களுக்கு ஏழுநூறு ரிங்கிட் கொடுங்கள் என்று எல்லா விபரங்களையும் மைத்துனர் சொல்ல கவனமாக கேட்டுக் கொண்டேன்.
இரயில் புறப்படவே உங்களின் அன்பிற்கும் அனுசரனைக்கும் நன்றின்னு பின்னூட்டம் போடுவது மாதிரி ரெடிமேட் வார்த்தைகளை சொல்லிவிட்டு மெல்ல மெல்ல அவர்களைவ pட்டு நாங்கள் நகர எங்களைவ pட்டு அவர்கள் நகர… இரயில் எங்கள் பயணத்தை உறுதி படுத்தியது.

கையசைத்துவிட்டு இருக்கையில் அமர்ந்தோம் டிடிஆர் வந்து எங்கள் பயணச்சிட்டை பரிசோதித்துவிட்டு குடிப்பதற்கு மினரல் வாட்டரும் சாப்பிட கேக்கும் கொடுத்தார்.

எல்லாவற்றையும் சரிபார்த்து சரி செய்துவிட்டு பெருமுச்சுடன் இருக்கையில் சாய்ந்தேன்.
பத்துதினங்கள் பினாங்கில் ஒடியதே தெரியவில்லை . ஒவ்வொருநாளும் ஒவ்வொரு இடத்திற்கு சுற்றிபார்க்க அலுப்பே படாமல் ஓரு கைடு மாதிரி வந்த எனது மைத்துனரை நினைத்து பெருமிதம் கொண்டேன். என்னால் அப்படி செய்திருக்க முடியுமா என்பது என்னிடம் நான் கேட்கும் கேள்வி…?
இந்த பத்துதினங்களும் என்மைத்துனர் வீடு இருந்தாலும் அவருடைய மாமனார் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்வீட்டில் நாங்கள் தங்கிஇருந்தோம்.
அங்கு அவர்கள் கொஞ்சமும் முகம்சுளிக்காமல் அடுக்கலைப்பக்கம் என் மனைவியை அனுமதிக்காமல் ஒவ்வொரு வேலைக்கும் மிக சந்தோசமாக உபசரித்த அண்ணன் தாஜ் குடும்பத்தினருக்கும் எப்படி நன்றி சொல்வேன் என்று எனக்கு தெரியவில்லை.
எங்கே குறைவந்து வடுமோ என்று பார்த்து பார்த்து அவர்கள் செய்த அன்பு உபசாரத்தை என்னால் மறக்க முடியாது.
பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்களே…இது மலேசிய வாழ் தமிழ் மக்களின் குணம் மணம் இப்படித்தான் இருக்குமோ என்று எண்ணத்தோன்றியது.
விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் என்பார்கள்… இது முற்றிலும் உண்மையான வார்த்தை. விருந்தோம்பல் என்பது இது தான். ஆனால் பத்து தினங்கள் தங்கியது எனக்குள் வெட்கத்தையளித்தது.

இரயில் மிதமான வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தது. எனது குட்டிஸ்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

பல ஸ்டேசன்களில் நின்று நின்று இரயில் சென்றது. இடைக்கிடையே எனது மைத்துனர் விசாரித்து வந்தார்.
மலைகளில் இரயில்பாதை அமைத்திருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் பசுமையே .
சரியாக 1.50 மணிக்கெல்லாம் கோலலம்பூர் வந்தடைந்தது.
எங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு ஸ்டேசனைவிட்டு வெளியில் வந்தோம். அண்ணேன்னு ஒருக்குரல் … புரிந்தது… நீங்கதானே ரெஜாக் ன்னு கேட்டேன் ஆமாம் என்று கூறி விட்டு உடமைகளை எடுத்துக் கொண்டு காரை நோக்கி நடந்தார்.
அவரைப் பின்தொடர்ந்து நாங்களும் சென்றோம். சுமாரான கார்.ஏழுபேர் அமரக்கூடியது.
ஒருவரையொருவர் விசாரித்துக்கொண்டோம். தமிழ்நாட்டில் எங்கே என்ன ஊர் என்று விசாரித்ததில் எங்க ஊருக்கும் பக்கத்து ஊருதான்.

கோலலம்பூருடைய அனுபவத்தை கூறினார். இவருடைய குடும்பம் இங்கேதான் இருக்கிறது இவருக்கு குழந்தைகள் அதிகம் என்றார்.
மதியம் சாப்பிட தமிழ் உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். சாப்பிட்டு முடித்துவிட்டு ஹோட்டலில் தங்குவதற்கு அழைத்துச்சென்றார்.
இந்தியா மோஸ்க் ஏரியா அதிகமான டிராபிக் இருக்கும். ஆதனால கொஞ்சம் தள்ளி நம்ம வீடு இருக்கு அங்கே தங்கினால் நீங்கள் கூப்பிட்ட உடனே நான் வந்துவிடுவேன் என்றார்.
ஹோட்டலுக்கு வந்தோம் ஒரு நாளைக்கு 100 ரிங்கிட் வாடகை எக்ஸ்டா பெட் இரண்டு கொடுத்தார்கள். அதற்க்கு 25 ரிங்கிட் .
மாலை 6மணிக்கு வருகிறேன் கோலலம்பூர் மினாரா டுயின்ஸ்டவர் இவைகளை பார்க்க அழைத்து போகிறேன் ஒய்வெடுங்கள் என்று கூறிவிட்டு சென்றார்.

அவர் வரும் வரை காத்திருப்போம்…!

Thursday, August 20, 2009

மனம் கவர்ந்த மலேசியா...15

அதிகாலை தூக்கத்திலிருந்து கண்களை திறக்க முடியாமல் திறந்து குடும்பத்தை கிளப்பி புறப்படுவதற்கு ஏழுமணி ஆச்சுங்க…
பினாங்கிலிருந்து சுமார் 250 கிமீ தொலைவில் கேமரான் ஐலாண்ட் இருக்கிறது…
போய் சேருவதற்கு எப்படி இருந்தாலும் 2 மணிநேரம் ஆகும்ன்னு கணக்கு போட்டு அதுபடியே போய் சேர்ந்தோம்.

கேமரான் ஐலாண்ட்கிட்டதட்ட நம்ம ஊட்டி கொடைக்கானல் மாதிரி தான் இருக்கிறது. ஆனால் அதைவிட சுத்தமாக நல்ல பராமரிப்பில் கேமரான் இருக்கிறது.



இந்த மலைப் பாதையில் ஏர்பின் வளைவுகளும் இருக்கிறது. மலைப்பாதையில் ஏற ஏற குளிர்ந்த காற்று மேகமூட்டம் நம்மை தழுவிக் கொள்கிறது.
பாதை வளைந்து செல்வதால் சிலருக்கு வாந்தி மயக்கம் வரலாம்.
அங்கு தங்குவதற்கு ஹோட்டல்ஸ் நிறைய இருக்கிறது . வாடகை சீசனைப் பொருத்து வசூலிக்கப்படுகிறது.

அங்கு ரோஜாக்களின் பண்ணை தேனீக்கள் பண்ணை ஸ்டேபிரி பழத்தின் பண்ணை தேயிலை தோட்டம் ஆப்பிள் மரங்கள் திராட்சை செடிகள் இப்படி மனதை கவரும் பழங்களும் மணங்களும் நிறைந்திருக்கிறது.
அந்த குளுமையான சூழலை எந்த காலத்திலும் நினைத்துப்பார்த்தாலும் நம் மனசுக்கு குளிரும்ங்க.

இந்த மாதிரி இடங்களில் இரண்டு மூனு நாட்கள் தங்கி அந்த இயற்கையை ரசிக்கனும் நாங்க லாங்காவி போனா மாதிரி இதுவும் ஒரு நாள் கூத்து தான் எனக்கு பெரிய வருத்தமாக இருந்தது.
தங்கமுடியலைன்னாலும் இதையெல்லாம் பார்க்க முடிந்ததேன்னு மனச தேத்திக் கொண்டேன்.


நாங்க கிளம்பும்போதே மதியம் சாப்பிட னாசிலாமா ங்கிற சாப்பாட்டை தயார் செய்து என் உறவினர் பார்சல் தந்திருந்தார்கள். சாப்பிடலாம்னு புல்தரையில் அமர்ந்தோம் மழையும் எங்களுடன் சாப்பிட வரவான்னு கேட்பது போல் பொழிய ஆரம்பித்தது அவசரமா அது சாப்பிட்டா நமக்கு பத்தாதேன்னு எடுத்துக் கொண்டு ஒடி பக்கத்தில் உள்ள தேவஆலயத்தில் நுழைந்தோம். அது மிக பழைமையான ஆலயம் . ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதாம்.
அதையும் பார்த்து விட்டு உணவையும் உண்டுவிட்டு கிளம்பினோம்.
அந்த இடத்தில் யாருமே கிடையாதுங்க ஏதோ த்ரில்லிங் படம் பார்ப்பது போல் ஒரு வித பயத்துடன் தான் இருந்தோம்…இல்ல இருந்தாங்க …நாமத்தான் பயப்பட மாட்டோமே.
பறவைகளின் சப்தமும் …ஸ்ஸ்…ஸ்ஸ் ன்னு காற்றின் அசைவில் மரங்களின் உரசல் சப்தமும் சும்மா சின்ன பயத்தை என் சுட்டிகளுக்கு ஏற்படுத்திருக்கிறது.
அவங்க பார்த்த அத்தனை பேய் படத்தின் பெயரையும் சொன்னாங்க.

ரோஜாக்கள் எங்களை வரவேற்பதைப்போன்று பல வண்ணங்களில் பூத்து வரவேற்றது… ஆமாங்க அதற்கு தெரிஞ்சுருக்கு வருகிறவன் வலைப்பூ வச்சிருக்கான்னு.
எல்லா செடிகளுக்கு பக்கத்திலும் நின்னு வருத்தப்படாமால் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

பொதினா செடிகள் நிறைய இருந்தது. அதைப்பார்த்ததும் கொஞ்சமா பறித்து வெண்நீரில் போட்டு நம்ம அரபு சுலைமாணி குடிச்சோம்.
தேன் பண்ணைக்கு சென்றோம் பல வகையான தேன்களை பாட்டலில் வைத்திருந்தார்கள் நாம் குடித்து பார்த்து வாங்கலாம் .
தக்காளிச்செடி இங்கு கொடிப்போல் பெரிதாக வளர்ந்திருந்தது ஒவ்வொரு தக்காளியும் நல்ல எடைக் கொண்டது.

தேயிலை மலைக்கு சென்று அங்குள்ள “ஃபோ டி கார்டன்” னையும் தொழிற்சாலையையும் பார்வையிட்டோம்.
வருபவர்களுக்கு நல்ல தரமான தேயிலை தேனீர் கொடுத்தார்கள். நல்ல மணம் நல்ல ருசியும்கூட


மாலைபொழுதில் அந்த பசுமையில் மெல்ல நடந்து இதமான குளிரில் நனைந்து அதை ரசிக்கும் போது கவிதை படித்த உணர்வு மேலிடவே என் துணைவியிடம்

இந்த இடத்தைப் பார்த்தால் என் கவிதை மாதிரி இருக்கேன்னு சொன்னேன்.

உங்க கவிதை மாதிரியா…? ஏங்க இவ்ளோ ஆசை… இந்த இடத்தை கவிதை மாதிரி இருக்குன்னு சொல்லுங்க ஒத்துக்கிறேன்… உங்க கவிதை மாதிரி இருக்குன்னு சொல்லாதீங்க…!
ஏன் … என் கவிதைக்கு இந்த இடம் பொருந்தாதோ … இதைவிட பெட்ரான இடத்தை சொல்லனும்னு தோனுதோ…ன்னே.

வேணா… நான் ஏதாவது சொல்லிடுவேன் …என்றார்

ம்…வெற்றி பெறும் ஒவ்வொரு ஆணுக்கும் பின்னாடி ஒரு பெண் இருப்பாள்னு சொல்லு வாங்க … ஆனால் நீயும் இருக்கியே … பெண்ணா நீ…இல்ல… தேவதைன்னு சொல்றேன் . ஹி…ஹி…ஹீ ( இந்த ஹி போடலைன்னா என்ன நடக்கும்னு உங்களுக்கு தெரியும்)
என்னா…?
ஓண்ணும் இல்லடி தங்கம்… நீ நடம்மா…!

கேமரான் ஐலேண்டின் இறக்கத்தில் பெரிய அருவி இருக்கிறது. குளிராக இருந்ததால் குளிக்க வில்லை. தண்ணீரும் சும்மா ஜில்லுன்னு இருந்தது. ஆனாலும் என் குழந்தைகள் அதில் குளிக்க ரொம்பவும் ஆசைப்பட்டார்கள். வேண்டாம்னு தடுத்திட்டேன். ஜூரம் ஏதும் வந்திடுமோன்னு பயம்தான்.

இரவு கேமரானைவிட்டு மெல்ல இறங்கி ஈப்போ வழியாக பினாங்கு வந்தோம்.
மறுதினம் எங்களின் பயணம் கோலலம்பூர். அங்கு மூன்று தினங்கள் இருந்து விட்டு திருச்சியை நோக்கி பறக்கனும்.
அதனால என் மைத்துனரிடம் நாங்க மட்டும் கோலலம்பூர் புறப்பட்டு சென்று சுற்றி பார்த்து விட்டு அப்படியே கிளம்பி இந்தியா சென்று விடுகிறோம். நீ வரவேண்டாம்னு சொல்லி விட்டோம்.
சரி நான் வரலை ஆனால் நீங்க சுற்றி பார்ப்பதற்கு ஒரு ஆளை அங்கு ஏற்பாடு செய்கிறேன்னு ஏற்பாடு செய்தார்.
பினாங்குலிருந்து இரயிலில் கோலலம்பூர் செல்வதற்கு டிக்கேட் புக் செய்தோம்.
காலை 7.30 க்கு இரயில் புறப்படுகிறது.
அதனால இப்ப தூங்கினாத்தான் காலையில சீக்கிரமா எழுந்திருக்க முடியும்ங்க…
இரயில்ல சந்திப்போம்ங்க…….

Monday, August 17, 2009

மனம் கவர்ந்த மலேசியா....14

உங்களோடு உறையாடுவது மலேசியா லங்காவியைப் பற்றி…
நடந்தோம் ஒடினோம் மேகத்தோடு கலந்தோம். பனியில் நனைந்த மலரைப்போல்
நனைந்தோம். சந்தோச அலையில் பறந்தோம்…
கீழே இறங்க மனமில்லாமல் இறங்கித்தான் ஆகவேண்டும் என்ற சூழ்நிலையில் இறங்கினோம். நாங்கள் கீழே இறங்கினாலும் எங்கள் மனதைவிட்டு ஸ்கைபிரிஜூம் அதை சுற்றியுள்ள இயற்கை சூழலும் இறங்கவில்லை.
இந்த ஸ்கைபிரிஜ்க்கு நம்ம ஆளுங்க அஜித் பிரிஜ்ன்னு பேரு வச்சிருக்காங்கன்னு நம்ம பதிவர் வந்தியத் தேவன் சொன்னாரு…

போகின்ற வழியில் பாம்பை பார்க்க … மலைப்பாம்பு … மஞ்சல் நிறத்தில் கழுத்தில் போட்டு போட்டோ எடுக்க பத்து ரிங்கெட் என்றார்கள். சரின்னு கழுத்தில் இரண்டு பாம்பை போட்டேன் அது என்னான்னா நாக்கால என் விரலை நக்க ஆரம்பித்தது. எனக்கு பயம் வந்துடுச்சி போட்டோவுக்கு போஸ் கொடுத்த எனது குடும்பம் பாம்பு நக்குதுன்னு சொன்னதுமே என்னை தனியே விட்டுட்டு தூரமா ஒடிப் போயிட்டாங்க… நான் கத்த அதுக்குள்ள போட்டோ கிளிக் செய்ய பாம்பை என்னிடமிருந்து வாங்கிட்டாங்க. ஏதோ தைரியமா பாம்பை தோளில் போட்டு போஸ் கொடுப்பதா நினைக்காதிங்க அதுக்கு பின்னாடி இவ்ளோ கதையிருக்கு.


அங்கிருந்து புறப்பட்டு முதலைப் பண்ணை சென்றோம்.
நாங்கள் செல்வதற்கு முன்பாகவே முதலை ஸோ முடிந்து விட்டது… உறங்கிக் கொண்டிருந்த முதலைகளை தட்டி எழுப்பி பார்த்தோம்… ம்கூம் அசைவதாக இல்லை. ஆனால் குழந்தை முதலை முதல் தாத்தா முதலைவரை அங்கு பார்த்தோம்.
கூட்டம் கூட்டமாக அடைத்துவைத்திருக்கிறார்கள். ஒருமணி நேரம் அவைகளோடு உரையாடி விட்டு புறப்பட்டோம்.

சாப்பிங் போகலாம்னு சொன்னாங்க … புறப்பட்டோம் போகின்ற வழியில் பீச் -சை காண்பித்தார் இதில் தான் ஹிந்தி தமிழ் தெலுங்கு இப்படி நிறைய படங்களின் சூட்டிங் நடைபெறுகிறது என்றார்.

மதியம் 3 மணியைத் தாண்டியது . வயிறு பொலம்ப ஆரம்பிச்சது… வேன் டைவரிடம் சொன்னேன்… நல்ல உணவகமா பாருங்கள் சாப்பிடலாம்னு…
சொன்னமாதிரியே நம்ம ராவுத்தர் கடையில நிறுத்தினாரு. இருந்த பசிக்கு கிச்சனில் உள்ள எல்லாத்தையும் சாப்பிடலாம்னு தோனுச்சி அந்த மாதிரியெல்லாம் சாப்பிட முடியுமா என்ன…?

துபாய் உணவகத்துல பாரிக் செட் ஆர்டர் பண்ணிட்டு ஒரு ரவுண்டு முடிஞ்சு அடுத்த ரவுண்டு சாம்பார் ஊத்திட்டு மூனாவது ரவுண்டு ரசம் ஊத்திட்டு நாலாவது ரவுண்டு மோர் கேட்கும் போது தொண்டை முட்டும் டேங் புள்ளாயி அப்பாடான்னு எழுந்திருச்சி கையகலுவி காசு கொடுக்கும் போது எவ்வளவுன்னு கேட்டு ஐந்து திரஹம் கொடுத்துட்டு வருவோமே அது மாதிரி இங்க முடியலைங்க. ஒரு தட்டையில சோத்தை வைத்து அதிலேயே நாம கேக்கிற ஐட்டத்தையும் வச்சு கொடுத்துடுறாங்க மறு சாப்பாட்டு கேட்டா அதுக்கு தனியா காசு கொடுக்கனும். கொடுத்தேன். நீங்க நல்லாருக்கனும் சாமின்னு துபாய் உணவகங்களை வாழ்த்தினேன். நிழலோட அருமை வெயில்ல போகிறவனுக்கு தெரிஞ்சா மாதிரி…!
சாப்பிங் போனோம்…பெரிய பெரிய கொடோன் மாதிரி பெருசு பெருசா கடைகள்… வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கினோம். துபாயில் கிடைக்காத சில ….கிடைக்ககூடிய பொருட்களில் சில… (விலை குறைவு என்பதால்) வாங்கினோம்.
மிலாமின் தட்டை பல வண்ணத்தில் கண்ணை கவரும் விதத்தில் மனதைக் கவரும் விலையில் கிடைத்தது. துபாயில் 7 திரஹத்திற்கு விற்கக்கூடிய ஒரு மிலாமின் தட்டை அங்கு 3திரஹத்திற்கு கிடைக்கிறது.

இப்படி பல பொருட்கள் வாங்கினோம். அத்தோடு கருவாடு… ம்… அதுவும் நெத்திலி கருவாடு… அதிலேயே மூனு விதமாய் வைத்திருக்கிறார்கள்.
அந்த மாதிரி கருவாடு அங்க மட்டும்தான் கிடைக்குமாம்…கருவாடு பிரியர்களுக்கு மலேசியா போனிங்கன்னா மறக்காம ஒரு கிலோவாவது நெத்திலி கருவாடு வாங்கிடுங்க… நல்ல ருசிங்க… தர்க்கு தர்க்குன்னு. சைவ பிரியர்களுக்கு சாரிங்க …
வாங்க வேண்டிய பொருட்களை வாங்கி மூட்டையா கட்டி தூக்கிக்கிட்டு நடந்தோம். இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருந்தாலும் பேரியை மிஸ்பண்ணிட கூடாதுன்னு சீக்கிரமாவே கிளம்பக் கூடிய கட்டாயம் .மன்னர் மஹாதிருடைய மியூசியம் பார்க்க முடியலையேங்கிற வருத்தத்துடன் வந்தேன்.
லங்காவியை பொருத்தவரையில் குறைந்தது ஒரு நாலு நாட்கள் இங்கு தங்கி சுற்றி பார்க்கனுமுங்க… அப்பத்தான் எல்லாத்தையும் முழுசா பார்க்கலாம்.
கால்ல வெண்ணிரை ஊத்திகிட்டவன் பறக்கின்ற மாதிரி பறந்தா எதையும் முழுசா பார்க்க முடியாது. என் கதை அதுதாங்க…

கஸ்டம்ஸ் வந்தோம் டூட்டி ஆபிஸர் எங்களை மடக்கினார். விசாரணை சாமான்களை திறந்து காண்பிக்க உத்தரவிட்டார். திறந்து காண்பித்தேன். எல்லாத்தையும் பார்திட்டு இதெல்லாம் மலேசியாவற்கா எடுத்துச் செல்கிறீர்கள் என்று கேட்க இல்லை சார்… நாங்க துபாயிலேந்து வந்திருக்கோம். எங்களுடைய சொந்த உபயோகத்திற்காக வாங்கிப் போறோம்னு சொன்னேன்.
ஏன் இதுவெல்லாம் துபாயில கிடைக்காதா ன்னு கேட்க கிடைக்கும் ஆனால் மலேசியா வந்த ஞாபகத்திற்காக வாங்கிப்போறோம்னு சொன்னதும் … இதுக்கு மேல ஏதாவது கேட்டால் இவன் அழுதுடுவான்னு அவர் நினைச்சிறுக்கனும் சரி போன்னு விட்டுட்டார். ஏதோ கடத்தல் பொருளை பதுக்கி வச்சி மாட்டிக்காமல் எடுத்து வந்ததை போல ஒரு உணர்வு ஏற்பட்டது.
ஏழு மணிக்கு கிளம்ப வேண்டிய பேரீ அரைமணிநேரம் தாமதமா புறப்பட்டது. அதுபோற வேகத்தை பார்த்தால் புதியவர்களுக்கு பயம் தான்…ஏதாவது சின்ன அசம்பாவிதம் ஏற்பட்டாலும் சங்குதான்.
இரவு 10 மணிக்கு பேரியிலிருந்து இறங்கி காருக்கு தாவி பினாங்கை நோக்கி … போற வழியில் இரவு உணவை உண்டு நல்லிரவு 12 மணிக்கு பின்தான் வீடு வந்தோம். உறங்குவதற்கு முன்னால மைத்துனர் சொன்னார் காலை ஐந்து மணிக்கெல்லாம் கேமரான் மலைக்கு போகனும் அசந்திடவேண்டாம்னு சொல்ல அவர் சொல்லும் போதே அசதி அழைப்புக் கொடுக்க … படுத்தது தான் தெரியும் உறங்கிப்போனோம்.
நல்ல தூக்கம்னு தூங்குன நான்விழிச்சதுனால சொல்லமுடிஞ்சதுங்க…!
அடுத்து கேமரான் மலையில் சந்திப்போம்…!

Tuesday, August 11, 2009

மனம் கவர்ந்த மலேசியா....13

மனம் கவர்ந்த மலேசியா பாகம்-8ல் மதிப்பிற்குரிய பதிவர் “வந்தியத் தேவன்" அவர்கள் ஜூலை 31-ல் பின்னூட்டம் போட்டிருந்தார்…அதில் லங்காவி போனீர்களான்னு கேட்டிருந்தார்.
லங்காவி போகாமல் மலேசியாவை சுற்றி பார்த்ததாக யாரும் கூறினால் அது முழுமைப் பெறாது. என்பது எனது கருத்து

லங்காவி டூட்டி பிரின்னு சொன்னேனில்லையா… அங்கு சிகரெட், மதுபானங்கள், மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள், மற்றும் துணிமணிகள், சாக்லேட் வகைகள், பேக் இப்படி ஏராளமான பொருட்களுக்கு வரி விலக்கு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த பொருட்களை வாங்கிச்செல்வதற்கு ஒரு சட்டமும் உண்டு. எப்படின்னா…
மூன்று தினங்கள் நாம் லங்காவியில் தங்கிருந்தால்; நாம் வாங்கிச் செல்லும் பொருட்களுக்கு வரிவிலக்கு உண்டு. இல்லையெனில் தீர்வை கட்டவேண்டும் என்று சொல்கிறார்கள் ஆனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இந்த விதிமுறை இல்லை என்று கூறுகிறார்கள்…அதை நம்பி நானும் சாமான்கள் (வீட்டு உபயோக பொருட்கள்) வாங்கினேன். எனக்கு தீர்வை போட்டாங்களான்னு நீங்க கேட்கிறீங்க…. ம்…அவசரப்படாமல் நிதானமா சொல்றேன்.

அங்கு பீச் , முதலை பண்ணை ,மன்னர் மியூசியம், மார்கெட் ,நிறைய ஹோட்டல்கள் இப்படி பார்க்கவேண்டிய இடங்கள் உண்டு.
நாங்கள் லங்காவியில் இறங்கியதும்.... ச்சோன்னு நல்ல மழைபெய்ந்தது. (பின்னே இருக்காதா…பிரபல பதிவர் வரேன்ல … அதான் மழைவரவேற்பு.)
இறங்கியதுமே எனது மைத்துனர் திரும்பி செல்வதற்கான டிக்கேட் எடுத்துக் கொண்டார். மாலை 7.30 மணிக்கு செல்லக் கூடிய பேரிக்கு .மாலை நாம் திரும்பும் போது தாமதம் ஆகிவிட்டால் டிக்கேட் கவுண்டரை மூடிவிடுவார்களாம்.

அங்கே ஒரு மினிவேனை வாடகைக்கு எடுத்துக் கொண்டோம். ஒரு மணி நேரத்திற்கு 30 ரிங்கிட் என்றார்கள்.
அங்கிருந்து முதலில் ஸ்கைபிரிஜ்கு சென்றோம். போகும் வழியெல்லாம் மழை எங்களை தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தது. சந்தோசமாகத்தான் இருந்தது ஆனால் ஸ்கைபிரிஜ் போவதற்கு கேபிள் கார் வழியாகதான் செல்லவேண்டும் கிளைமேட் நன்றாக இருந்தால்தான் கேபிள் காரை இயக்குவார்களாம்.
அங்கே போய் இறங்கியதும் பார்த்தால் நிறைய மக்கள் கேபிள் காருக்காக காத்து நிற்கிறார்கள். டிக்கேட் கொடுக்கப்படவில்லை.

விசாரித்தோம் நம்ம ஊரு வானிலை அறிக்கை சொல்றவங்க மாதிரி … எதிர்பார்க்கிறோம் வரலாம் அப்படின்னு சொன்னாங்க. அதாவது மழையை எதிர்பார்கிறார்களாம் மேகமூட்டம் அதிகம் வரலாம்ன்னு சொன்னாங்க அதனால காத்திருப்போர் லிஸ்டில் நீங்களும் காத்திருங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.
அடக்கடவுளே இவ்வளவு தூரம் வந்து இப்படி ஆகிவிட்டதேன்னு நாங்க எல்லோரும் வருத்தப்பட்டோம்.
அதுவரைக்கும் அங்குள்ள முயல்கள் பண்ணை மான்கள் பண்ணை இவைகளை கண்டு களிக்கலாம்னு சுற்றினோம்… காதுகளை பிடித்து முயல்களை தூக்கி அழகு பார்த்தோம். மான்களுக்கு உணவு கொடுத்து மகிழ்ந்தோம்.


இந்த நேரத்தில் மழை நின்றது. மேகமூட்டம் குறைந்தது சுமார் 2 மணிநேரத்திற்கு பிறகு வானிலை பச்சைக் கொடி காட்டியதும் பெல் அடிச்சாங்க… நாமுந்தி நீமுந்தின்னு முண்டி அடிக்காமல் எல்லோரும் வரிசையில் நின்று டிக்கேட் வாங்கிக்கொண்டிருக்க … நம்மஆளு நம்ம கலாச்சாரத்தை விட்டுக் கொடுப்பாங்களா … எங்களை அழைத்துவந்த வேன் டிரைவர் எங்கோயோ எப்படியோ பூந்து டிக்கேட் வாங்கி வந்துட்டாரு.
எங்களுக்கு சந்தோசம் தாங்கலை .

கேபிள் காரில் ஏறி அமர்ந்தோம் . கடல் மட்டத்திலிருந்து 700 மீட்டர் தூத்திற்கு அது செங்குத்தாக தூக்க கீழேப் பார்தால் பாதாளம் மாதிரி பெரிய குன்றுகள் அடி வயத்தை அப்படியே கவ்விகிச்சி.
என் மனைவி முகத்தை மூடீக்கிட்டாங்க எனக்கு பயம் மாதிரி தெரிஞ்சாலும் …ம்கூம் …நான் பயப்புடலையே.

என் வாண்டுகளுக்கு ரொம்ப தைரியம். நாங்க உட்காந்துகிடப்பதற்கே பயந்துக் கொண்டிருந்தோம் அவர்கள் நின்றுக் கொண்டு வேடிக்கை பார்த்தார்கள்.
முதல்கட்டமாக 500 மீட்டர் தூரத்தில் உள்ள ஸ்டாப்பில் இறக்கினாங்க…
அங்கிருந்து லங்காவியை பார்க்கலாம் லங்காவியை சுற்றி சுமார் 99 தீவுகள் இருக்கிறதாம் இதுதான் மலேசியாவின் பெரிய ஐலாண்ட் என்கிறார்கள்.


அடுத்தகட்ட உயரத்திற்கு செல்ல கேபில் காரில் ஏறினோம். இதேபயம் தான் என்றாலும் முதலில் ஏற்பட்டது போல் இல்லை. கிட்டதட்ட 700 மீட்டருக்கு மேல் சென்று விட்டோம். ஆந்த மலையின் மீது வட்டமான பெரிய மேஜைப்போன்று கட்டிருந்தார்கள் அதில் நின்றால் உடம்;பெல்லாம் மேகத்தில் உரசி நனைந்து தலைமுடி யெல்லாம் ஈரமாகி அட….அட… இப்போ நினைத்தாலே மனசெல்லாம் குளிருதுங்க. அந்த குளிருடன் ஸ்கை பிரிஜ்ஜில் நடக்க தொடங்கினோம்.
நடக்கும் போது மேகம் சூழ்ந்துக் கொள்ள எதிரே நிற்பவரைக்கூட பார்க்க முடியாதளவு மேகம் எங்களை இருக தழுவிக் கொண்டது… அந்த காட்சியே எனக்கு கவிதையாக தெரிந்தது . நடந்தேன் ஒடினேன் அமர்ந்தேன் அங்கிருந்து இந்தியாவிற்கு போன் செய்து எங்கள் உறவினரிடம் பேசி இந்த இடத்தைப் பற்றி விபரமாக என் மனைவி பேச… அன்றைய தினம் பில்லா படம் ஒடிய தியேட்டரில் நல்ல கலெக்ஷன் ஆகிருக்குமுங்க. பில்லா படத்தை அடையாளப்படுத்திதான் எல்லோரிடமும் என் மனைவி கூறினார்.

லங்காவியில் ஸ்கைப்ரிஜ் …இது 2004-ல் அமைக்கப்பட்டதாகும்.
இது கடல் மட்டத்திலிருந்து 687 மீட்டர் உயரத்தில் அமைத்திருக்கிறார்கள். இந்த பாலத்தின் நீளம் 136 யாட், அகலம் 2 யாட் ஆகும் . இந்த பாலத்தின் சப்போட் 95 யாட் நீளமுள்ள ஓரேயொரு கம்பியும், அதை தாங்கி நிறுத்தும் 8 கயிருகளும் மட்டும் தான்.
அந்த பாலத்தில் நாம் நடக்கும் போது காற்றின் வீச்சத்தில் சின்னசின்ன அதிர்வுகளை நம்மால் உணரமுடிகிறது. அந்த உணர்வு ஒருவித பயத்தை ஏற்படுத்தினாலும் அந்த பயத்தில் சந்தோசம் கிடைக்கிறது.

பயம் தொடரும்………….

Saturday, August 8, 2009

பழகலாம் வாங்க.....

எனக்கு அரபு நபருடன் பழக்கமிருக்கிறது . எனக்கு அரசியல் வாதியுடன்
பழக்கமிருக்கிறது .
இப்படி பலர் அல்லது சிலர் கூற நாம் கேட்டிருக்கலாம் அல்லது நாமே
சிலரிடம் கூறியிருக்கலாம்.
பல மனிதர்களுடன் பழகும் வாய்ப்பை நாம் பெற்றிருக்கிறோம் .அந்த பழக்கம்
நட்பாக காதலாக மாறலாம் நட்பிற்கு நாடோ மொழியோ நிறமோ இனமோ தடையில்லை . ஆத்மார்தமான அன்பு மட்டுமே போதுமானது.
சிலருடன் நாம் பழகும் போது அவர்களுடைய பழக்கத்திற்கு நம்மை அழைத்து
செல்வார்கள் .அல்லது நம்முடைய பழக்கத்திற்கு நாம் ஈட்டுச் செல்வோம் . இது அவரவரின்
மன வலிமையை பொருத்தே நிகழ்கிறது.

பழக்க வழக்கத்தினால் ஒரு மனிதன் முன்னேற்ற மடையவும் முடியும்
தாழ்வு நிலைக்கு செல்லவும் முடியும்.

பெற்றோர்களின் வளர்ப்பில் குழந்தைகள் மனதில் முதன் முதலில்
பழக்கம் பதிவாகிறது. இந்த பதிவு குழந்தைகளின் வளர்ச்சியில் சிறுவனாகி வாலிபனாகி வயதாகும் வரையில் பதிவான பழக்கம் முழுமையாய் மாற்றமடைவதில்லை . அதனால் தான் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லி தர வேண்டும் என்பார்கள்.

வளரக்கூடிய சூழ்நிலையில் வாழக்கூடிய சூழ்நிலையிலும் எத்தனையோ
மாற்றங்கள் பழக்கத்தினால் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது.

தீய பழக்க வழக்கங்களை கொண்டவர்கள் அவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவதில்லை அவர்களைச் சார்ந்திருக்க கூடிய அனைவரும் பாதிக்கப் படுகிறார்கள்.

நல்ல பழக்கத்தினால் ஒரு குடும்பம் சந்தோசமாக வாழ நூரு சதவீதம் வாய்ப்பிருக்கிறது.

நல்ல பழக்க வழக்கங்கள் வருவதற்கு கஷ்டமாக இருக்கலாம் ஆனால்
அவற்றோடு வாழ்வது சுலபமே ஆகும். தீய பழக்க வழக்கங்கள் சுலபமாக வருவதாக இருக்கலாம் ஆனால் அவற்றோடு வாழ்வது கடினமாகும் .என்கிறார் ஒரு ஆய்வாளர்.

நம்மை விட உயர்தவர்களோடு பழகுவதற்கு எப்போதும் முயற்சி செய்ய வேண்டும். அந்த பழக்கம் நம்மை அவர்களவிற்கு சமமாக உயரச் செய்யும்.

நம் பழக்கத்தை விட குறைந்தவர்களோடு நாம் பழகிக் கொண்டிருந்தால்
அவர்களுடைய குணதிசயங்கள் நம்மில் தொற்றிக்கொள்ள நிறைய்ய வாய்ப்பிருக்கிறது .பின் நாமும்அவர்களைப் போலாகி விடுவோம்.

அது மட்டுமல்ல தாழ்வு மனப்பான்னை உடையவரோடு நாம் பழகினால்
நம்மால் எதையும் சாதிக்க முடியாது எதிலும் வெற்றி பெற முடியாது . நமக்கும் தாழ்வு மனப்பான்மை உண்டாகி விடும்.

தாழ்வு மனப்பான்மையுடைய நண்பர்களை பெற்றவர்கள் அவர்களை நீங்கள் மாற்றிவிடுங்கள் இல்லை யெனில் நீங்கள் மாறிவிடுவீர்கள் .

நமது முன்னேற்றதிற்கு நம் பழக்க வழக்கங்கள் முக்கிய பங்கு
வகிக்கிறது என்பதை மறந்திடக்கூடாது . கவனமாயிருக்க வேண்டும்.



தீய பழக்க வழக்கத்தை கொண்டவரோடு நட்பு வைத்துக் கொள்வதை விட நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.அவர் திருந்தாத வரையில்.

நம்மோடு பழகும் நம் நண்பர்களின் பழக்க வழக்கங்களை நாம்
கூர்ந்து கவனிக்கதான் வேண்டும். அவர்களின் தீய பழக்கத்தினால் நமது முன்னேற்றம் எந்த விதத்திலும் தடைப்படக் கூடாது.

சில தீய பழக்கம் உடம்பை கெடுக்கும் சில பழக்கம் மனதை கெடுக்கும் அதனால் உறவுகள் இடையே விரிசல் கொடுக்கும்.

நமது நடத்தை பெரும்பாலும் பழக்கமே யாகும் . இவை நாம் சிந்திக்காமலேயே தானாகவே வந்து விடுகின்றன. பண்பு என்பது நமது பழக்க வழக்கங்களின் மொத்தத் தொகையாகும். நல்ல வித பழக்க வழக்கங்களுடன் ஒருவர் இருந்தால் அவர் நல்லவிதப் பண்பு உடையவர் என்று கருதப்படுகிறார்.


எதிர் மறைப் பழக்க வழக்கங்களை எதிர் மறை பண்புடையவர் ஆகிறார்.பழக்க வழக்கங்கள் தர்க்கத்தையும் பகுத்தறிவையும் விடவும் மிகப் பலமானவை .
தொடக்கத்தில் பழக்க வழக்கங்கள் நம்மால் அறிந்துக் கொள்ள முடியாத அளவிற்கு மிக பலவீனமாக இருக்கும் இறுதியில் அவற்றிலிருந்து வெளிவர முடியாத அளவிற்கு மிகப் பலமானவையாகி விடும் . பழக்க வழக்கங்களைத் தன்னிச்சையாகவோ அல்லது மன உறுதியானாலோ வளர்த்துக் கொள்ளலாம்.

நான்சிறுவனாக இருந்த போது எனது பெற்றோர்கள் நீ நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் ஏனென்றால் பழக்க வழக்கங்களே பண்பை உருவாக்குகின்றன. என்று என்னிடம் சொன்னது நினைவுக்கு வருகிறது என்கிறார் ஷிவ்கெரா.

ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவரின் நல்ல பழக்க வழக்கத்தினால் அந்த கம்பெனி அவர் மீது நம்பிக்கை வைக்கிறது அதனால் அவருக்கு உயர் பதவியை அது சம்பாதித்து தருகிறது. நல்ல நண்பர்களை தேடி தருகிறது. பலர் நம்மிடம் பழகுவதற்கு ஆர்வப்படுவார்கள்.நல்ல சிந்தனையாள்களுடன் பழகும் போது நமக்கும் நல்ல சிந்தனைகள் மலரும்.

நல்ல பழக்க வழக்கங்களை கொண்ட சிலர் சில சந்தர்பங்களில் தீய பழக்கத்திற்கு மாறிவிடுவதுண்டு இதற்கு பல வித காரணங்கள் கூறுவார்கள் இவர்களின் வாழ்க்கையில் ஏதோ ஒரு நிகழ்ச்சி மனதில் பாதிப்பை உண்டாக்கியிருக்கலாம் இதிலிருந்து மீள்வதற்கு இவர்களின் நண்பர்கள் உதவி செய்ய முன் வர வேண்டும் இது இவர்களின் மீது கடமையாகும்.
ஓரு பழக்கத்தை வளர்ப்பது என்பது நிலத்தை உழுவது போன்றதாகும்.
நல்ல பழக்கத்தை வளர்ப்பது ஒரு பூந்தோட்டத்தை உருவாக்குவது போலாகும்.

எதையும் அறிவுரைகள் என்று நாம் கருதவும் கூடாது அதை ஒதுக்கவும் கூடாது இவைகள் யாவும் நமது அனுபவத்தின் பிரதிலிப்பு. . .

Friday, August 7, 2009

மனம் கவர்ந்த மலேசியா...12

தென்னமரத்தை இதுவரைக்கும் கண்டுபிச்சுரப்பீங்க அதனால ரொம்ப பில்டப் பண்ணல நேரா விசயத்துக்கு வந்துடுறேன்.
தென்னமரம் மாதிரி உள்ளது எண்ணெய் மரம்… அதாவது ஃபாம் ட்ரீ –சமையல் எண்ணெய் இந்த மரத்தின் காய்களிலிருந்து தயார் செய்கிறார்கள். இது மலேசியாவில் ஐவேஸ்ரோடுகளின் இரு பக்கத்திலும் காணமுடிகிறது.

இன்று பொட்டானிக்கல் பார்க் சென்றோம். அதனுல் உடற்பறிச்சி செய்வதற்கான அனைத்து உபகரணங்களும் வைத்திருக்கிறார்கள். சனி ஞாயிற்று கிழமைகளில் மக்கள் பிரத்தோமாக உடற்பறிச்சி செய்வதற்கு இங்கு வருகிறார்கள். சிலர் தினசரியும் வந்து செல்வார்களாம்.

உடற்பயிற்ச்சி மட்டுமல்ல நடைபயிற்ச்சி செய்பவர்களுக்கும் இந்த பூங்காவில் இடம் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த இயற்கையின் சூழலில் நடந்தாலே நோய்கள் பறந்து போய்விடும். எங்கும் பசுமை குளிர்ந்த காற்று பல வண்ணங்களில் நம் எண்ணங்களை கவரும் நமக்காகவே பூத்த மலர்கள். இவைகளுக்கு நடுவே நாம் நடந்தால் நம்மிடமுள்ள டென்சன் நம்மிடம் சொல்லிக்காமலேயே விடைப்பெற்று விடும்.


பினாங்கின் பீச் நமக்கு மெரினாவை ஞாபகப்படுத்தும் குதிரைசவாரி ,மோட்டார் சவாரி ,பாராசூட்சவாரி இப்படி சவாரிகள் நிறைந்த பீச். மலைப்பகுதிகளை சுற்றி கடல் சூழ்ந்திருப்பதால் அதன் அழகே அழகுதான்.
ஸ்ட்ரீட் மார்க்கெட் இருக்கிறது. இங்கு உபயோகித்த பொருட்களும் புதிய பொருட்களும் கிடைக்கும். திருட்டுப்போன சாமான்களை கூட இந்த மார்க்கெட்டில் வாங்கலாம். ஆமாங்க நம்ம வீட்டில் திருடியிருப்பாங்க மார்க் கெட்டில் வந்த விலைக்கு விற்பனை செய்து விட்டு போய்விடுவார்களாம். நம்ம பொருளுக்கு நாம் காசுகொடுத்து விட்டுதான் எடுத்துவரனும். நம்மஊரு பலே கில்லாடிகள் இங்கு அதிகம் என்கிறார்கள். கவனமாக இருக்கவேண்டும் என்று எச்சரிக்கிறார்கள்.

மலேசியாவில் சூப் ரொம்ப பேமஸ். அதுவும் மாட்டுவால் சூப்… ம்… நல்ல டேஸ்ட். போறவங்க மறக்கமால் சூப் குடிங்க. விஜிடேரியனும் உண்டு.


சனிக்கிழமை காலை 5மணிக்கு புறப்பட்டோம் லங்காவி செல்வதற்கு. பினாங்கிலிருந்து ஃபேரியில் சென்றால் 4 மணிநேரமாம். அதனால் அலோஸ்டார் பக்கத்தில் செல்கின்ற ஃபேரியில் 1மணிநேரத்தில் சென்று விடலாம் என்று மைத்துனர் ஆலோசனை…
ஏன் பினாங்கிலிருந்தே போகலாமே என்றேன்.
போகலாம் ஆனால் பலர் வாந்தி எடுப்பார்கள்… அதைப் பார்க்கும் நமக்கும் வாந்திவரும். ஃபேரி ஆட்டம் இருக்கும் மிக வேகமாகவும் செல்லும். என்று விளக்கம் கூற
சரி நீ சொல்றபடியே போகலாம்னு அலோஸ்டார் நோக்கி எங்கள் கார் பயணமானது.
ஹைவேயில் அவர்கள் போகக்கூடிய ஸ்பீடு எவ்வளவு தெரியுமா…? 160 லிருந்து 200 யும் தாண்டுகிறது…
இவர்களின் வேகத்தில் நாம் எதையும் ரசிக்கமுடியாது… பயத்திலேயே அமர்ந்துக் கொண்டு எப்படி கார் ஒட்டுகிறார் முன்னாடி போற காரில் இடித்து விடுவாரோ இப்படி நெஞ்செல்லாம் பகீருடன் பதட்டத்துடன் தான் பயணம் செய்ய வேண்டி இருந்தது.
அலோஸ்டார் ரோடுவழியாக தாய்லாந்து சென்று விடலாம். பக்கம்தான் என்கிறார்கள். தாய்லாந்து பார்டரில் பெரிய துணி மார்க்கெட் இருக்கிறது. விலையும் குறைவாம். பலர் வியாபாரத்திற்கு அங்கு போய் தான் கொள்முதல் செய்வார்களாம்.


நாங்கள் லங்காவி செல்வதற்கான ஃபேரிக்கு வந்துவிட்டோம். காலை
8.30 மணிக்கு ஃபேரி புறப்படப்போகிறது. ஓவ்வொரு ஒரு மணிநேரத்திற்கு ஒரு ஃபேரி லங்காவி செல்கிறது. அதேபோல் லங்காவியிலிருந்து திரும்புவதற்கும் அப்படியே.
"லங்காவி" ஒரு ஐலாண்ட் அது டூட்டி ஃப்ரீ ஐலாண்டு . கிட்டதட்ட துபாயில் ஜெபல்அலி இருப்பது போல் இருந்தாலும் நிறைய்ய வித்தியாசம் உண்டு. லங்காவியில் குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கலாம். அந்த ஐலாண்டை நோக்கி உலகிலிருந்து பல நாட்டினர்கள் வருகை புரிகிறார்கள்.
அந்த இடத்தினனுடைய அமைப்பும் இயற்கையாகவே இயல்பாக அமைந்திருக்கிறது. பார்ப்பவர்களின் கண்ணைமட்டுமல்ல மனதை கொள்ளைக் கொள்கிறது.
லங்காவி மிக அழகான ஐலாண்ட் நம்மஊரு ஸ்டார் அதாங்க நம்மபில்லா அஜீத் இந்த ஐலாண்டில் தான் அந்த படத்தின் சூட்டிங் நடந்திருக்கிறது. இதைப்பற்றி இன்னும் நிறைய சொல்லனும் …. சொல்கிறேன்…!

Monday, August 3, 2009

மனம் கவர்ந்த மலேசியா....11

மலைப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு சென்றோம்… மாலை 6 மணியானதால் யாருமே அங்கு இல்லை. சாலையில் காரை நிறுத்திவிட்டு கரடுமுரடான பாறைகளுக்கிடையில் ஏறி இறங்கி நீர்வீழ்ச்சியை அடைந்தோம்.
பால்மாதிரி தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது தண்ணீரில் காலை வைத்தால் ஐஸ் மாதிரி சில்லுப்பு இதுல எப்படி குளிப்பதுன்னு நான் யோசனை பண்ணிக்கொண்டு நிற்க எனது மைத்துனரும் அவர் பையனும் டமார்னு தண்ணில குதிச்சாங்க அதைப்பாத்து என் மகள்களும் குதிக்க எனக்கு குளிர்வந்துடுச்சு.
நல்ல சுத்தமான தண்ணீர் அந்த அருவியின் அருகிலேயே பெரிய பைப் இருந்தது இந்த தண்ணீரைத்தான் பினாங்கு மக்கள் குடிக்கிறார்கள் என்று விடை கொடுத்தார் மைத்துனர்.
ஏல்லோரும் குளிக்கும் போது நான் மட்டும் சும்மா நின்னா நல்லா இருக்காது இல்லிங்களா அதனால நானும் குதிச்சிட்டேன்.
கொஞ்சநேரம்தான் குளிரு அப்புறம் ஜாலியாத்தான் இருந்துச்சு…
அரைமணிநேரம் குளிச்சுட்டு கரையேறினோம்.


நாங்கள் நிறுத்தியிருந்த காருக்கு அருகில் கடைகள் இருந்தன. ஆந்த கடைக்கு பக்கத்தில் ஒரு கூண்டில் இரண்டு குரங்கு குட்டிகள் விளையாடிக் கொண்டிருக்க எனது சின்ன மகள் ஆசையாய் அந்த குரங்குக்கு சிப்ஸ் கொடுத்தால் அதை வாங்கி தண்ணீரில் நனைத்து குரங்கு சாப்பிட்டது. மீண்டும் சிப்ஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் போது ஒரு குரங்கு எனது மகளின் முடியை பிடித்து இழுக்க மற்றொரு குரங்கும் இழுப்பதற்கு ஆயத்தமானது. நூன் எனது மைத்துனரிடம் பேசிக் கொண்டு நின்றேன் இதை கவனிக்க வில்லை… என் மகள் அலறியபோது தான் நான் ஒடி குரங்குகளிடமிருந்து என் மகளின் முடியை காப்பாற்றினே;.
என் மகள் ரொம்பவும் பயந்து விட்டாள்.
இவ்வளவுக்கும் அந்த குரங்கு கூண்டுக்குள் தான் இருந்தது.
குழந்தைகள் மிக அருகில் சென்று நிற்கக்கூடாது. மிருகங்களை பார்க்கும் போது கொஞ்சம் இடைவெளி விட்டுதான் நிற்கவேண்டும்ன்னு என் மகளுக்கு ஆறுதல் சொல்ல…
இதையெல்லாம் சொல்லுங்க என் பக்கத்துல நீங்க ஏன் நிக்கலன்னு அழுதுக்கொண்டே கூற சாரிமா…ன்னு சமாதானம் படுத்தினேன்.




அங்கிருந்து புறப்பட்டு டாய்ஸ் மியூசியம் சென்றோம்.
உள்ளே சென்றால் உலகத்திலுள்ள அனைத்து பொம்மைகளையும் அழகாக அடுக்கி வைத்திருந்தார்கள்.
கலாச்சாரம் சினிமா அரக்கர்கள் சூப்பர்மேன் ஃபைடர் மேன் குத்துச்சண்டை வீரர்கள் ஆங்கிலப்பட நாயகர்கள் நம்ம காமடி உலக நாயகன் மிஸ்டர் பீன் இப்படி நிறைய்ய விதவிதமான பொம்மைகள்.
இதன் உள்ளே வருவதற்கு ஒரு நபருக்கு 20 ரிங்கிட். இது கொஞ்சம் அதிகமாதான் தெரிஞ்சுது…
30 நிமிடங்களில் அனைத்தையும் பார்த்தாச்சு… இது உலகத்திலேயே பெருசுன்னு போடு போட்டிருந்தாங்க இருந்தாலும் இருக்கலாம்…







மறுதினம் தங்கஆபரணங்கள் செய்யும் பேக்டரிக்கு செல்ல தயாரானோம்…
துபாயில் நான் வேலைபார்க்கும் நகைக் கடைக்கு பினாங்கிலிருந்துதான் நகைகள் செய்து வருகிறது… சப்ளையர்கள் தங்களுடைய நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
அதன் பேரில் சென்றோம் நகைகள் எப்படி செய்கிறார்கள் என்பதை என் துணைவியாருக்கு காண்பித்தேன்.
அதிகமாக இந்தோனேசிய பெண்கள் தான் வேலைப்பார்க்கிறார்கள். வேலையில் மிக கவனமாக இருக்கிறார்கள். ஆனால் சம்பளம் குறைவு.
மலேசியாவிலேயே தங்க தொழிற்சாலை பினாங்கில் தான் அதிகம்.
துபாய்க்கு மிக அதிகமான தங்க இறக்குமதி மலேசியாவிலிருந்து தான் வருகிறது.
இதன் உரிமையாளர்கள் பெரும்பாலோர் சீனர்கள் தான.ஒவ்வொரு வாரமும் ஒரு ஆயிரம் கிலோ துபாய்க்கு இறக்குமதி செய்வார்கள்.
22 கேரட் 21 கேரட் 18 கேரட் இந்த மூன்றுவித தரத்தில் ஆபரணங்கள் செய்கிறார்கள்.
தோழிற்சாலையை முழுவதும் சுற்றி பார்த்து விட்டு கிளம்பும் சமயம் இன்று இரவு டின்னருக்கு எல்லோரும் வரனும்னு சொன்னார்.
சரி வருகிறோம்ன்னு சொன்னேன்… டின்னரை முடிச்சுட்டு மசாஜ் கிளப் வறியான்னு என்னை கேட்டாரு…
ஏம்ப்பா நாங்க சந்தோசமா இருக்குறது உனக்கு பிடிக்கலையா…ன்னே.
இதுல என்ன இருக்குன்னு ரொம்ப அசால்ட்டா சொன்னான்.
டேய் இதுல என் வாழ்க்கையே இருக்குடா… நீபேசுனது என் மனைவி காதுக்கு விழுல… விழுந்திருந்தா அவ்வளவு தான்.
ஏற்கனவே ஒருமுறை கம்பெனி வேலையா நான் மட்டும் பினாங்கு வந்தேன்.
நான் இருக்கும்போதே மசாஜ்க்கு கூப்பிடுகிறாரே நீங்க தனியா வந்தப்ப என்னென்ன பண்ணிருப்பிங்கன்னு தேவையில்லாம அவ கற்பனைக்கு ஆளாகி நான் கர்ப்பம் தரிக்கனுமா…? நான் ஏக பத்தினி விருதன்னு உனக்கு தெரியாதா…?ன்னே.
பரவாயில்லையே உன் மனைவிக்கு நல்லவே பயப்புடுற… நான் மட்டும் தான் அப்படின்னு நனைச்சேன்…ன்னான்.
என்னைவச்சாப்பா உன்னை சோதிக்கனும் … சரி ஆள விடு இதுக்கு மேல நின்னா என்ன நீ வம்புள மாட்டிவிட்டுடுவ… டின்னர் மட்டும் ஏற்பாடு பண்ணு.
நாவாரேன்னு … கிளம்பிட்டேன்.

மாலையில் பினாங்கு கடைத்தெரு சென்று சாமான்கள் வாங்கினோம். இரவு டின்னருக்கு சென்றோம். தமிழ் உணவை சீனர்கள் ருசித்து சாப்பிடுகிறார்கள்.
ஒருவழியா டின்னரை முடிச்சுட்டு பட்டவர்த் போகலாம்னு மைத்துனர சொல்ல புறப்பட்டோம்.
பினாங்கு பாலத்தில் சென்றுக் கொண்டிருக்கும் போது மைத்துனர் இடம் சொன்னேன்.
பினாங்கின் இன்னொரு பெயரை கண்டுபிடிச்சுட்டேன்னு…
எங்க சொல்லுங்க பார்ப்போம்னார்.
சார்ஜ்டவுன் என்றேன்.
எப்படி மச்சான்னா
சைன் போடுதான் போட்டிருக்கே…ன்னே தென்ன மரம் என்ன மரம்னும் கண்டுபிடுச்சிட்டேன்னே…
ஆர்வமாக என் மனைவி என்னமரம்ங்கன்னு கேட்க
சொல்லுங்க மச்சான் தெரிஞ்சுக்கிறோம்னு கேட்க

தென்ன மரம் என்ன மரம் ன்னு நான் திருப்பி சொல்ல
என்ன கிண்டல் பண்றீங்களான்னு அவங்க கேட்க
இல்ல இல்ல
இதை வேகமா கிடுகிடுன்னு சொல்லுங்க
தென்னமரம் என்ன மரம் … தென்னமரம் என்னமரம்
இதிலேயே பதில் இருக்குது
சொல்லி பாருங்க…
ஜூட்…!

Sunday, August 2, 2009

மனம் கவர்ந்த மலேசியா...10

இப்படி கேள்வியா கேட்டுகிட்டு போன பதிலை யார் சொல்வதுன்னு கேக்கிறீங்களா…? கண்டிப்பா பதில் கிடைக்குமுங்க…
நேத்து பின்னூட்டத்துல மதிப்பிற்குரிய ஐயா சுப. நற்குணன் அவர்கள் பினாங்குக்கு தமிழில் பொருள் பாக்கு என்று விளக்கத்தை தந்துள்ளார்…ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி…!

மறுநாள் பைசி கார்டன் போகலாம்னு முடிவு பண்ணினோம்…எல்லாமே மதியத்துக்கு பிறகு தான் கிளம்புனும்னு என் மைத்துனர் ஆர்டர்…காலை நேரத்துல அவர் கடையின் அலுவல்களை பார்ப்பதினால் இந்த முடிவு…
மதியம் புறப்பட்டோம்…
கடற்கரையோரம் உள்ள மலைப்பகுதியில் கார்டன் அமைந்திருக்கிறது. பைசிகார்டனில் நடப்பதற்கு தான் கால்வேண்டும்…வயசு ஆகிடுச்சுன்னு நினைக்கவேண்டாம்…நான் என்னச் சொல்லிக்கல…நான் சின்ன பையன்தானே…
மலையின் மீது ஏறுதற்கு வசதியாக சாலை அமைத்துள்ளார்கள்… சாலைதான் ஏற்றமும் இறக்கமும் வாழ்க்கயைப்போல இருந்துச்சு…மூச்சு வாங்கிடுச்சு…( என் கூட வந்தவங்களுக்கு) அந்த கார்டன் உள்ளே பட்டை ஏலக்காய் ஜாதிக்காய் மிளகாய் பூண்டு இப்படி மசால சம்பந்தப்பட்ட செடி கொடிகள் இருக்கின்றன…அதுமட்டுமல்ல அங்கே ஒரு டீகடை இருக்கு அருமையான மசால டீ போட்டு தராங்க…குடிச்சேன் நல்ல உரைப்பாக (காரமாக) இருந்துச்சு…
என் மைத்துனர் சொன்னார் …. மச்சான் இந்த கார்டன் உள்ள நீங்க ஆச்சிரியபடுகிற மாதிரி ஒரு விசயம் இருக்கு…கண்டுபிடிங்கன்னா…?
டேய்…வேணாம்…என்ன உசுப்பேத்தாதே ஏற்கனவே கேட்ட கேள்விக்கு பதில் வரலை…இப்ப என்ன வச்சு நையாண்டி பண்றியான்னே…
இல்ல மச்சான் உண்மையாதான் சொல்றேன்னார்…
நான் ஆச்சிரியப்படுகிற மாதிரி என்ன இருக்குன்னு யோசனை பண்ணிக் கொண்டிருந்தேன்…ஒன்னும் புலப்படல…அப்படியே கார்டனை சுற்றி வரும்போது இங்கே ஒரு சின்ன மியூசியம் இருந்துச்சு அது உள்ளே சென்றோம்.

சென்றதும் ஆச்சிரியப்பட்டேன்…என் மனைவி சந்தோசப்பட்டார்…என் குழந்தைகள் மாமா…மாமா…ன்னு கூக்குரலிட்டாங்க…அப்படி என்ன விசயம்…?

மியூசியத்தில் என் மைத்துனரின் புகைப்படம்


அந்த மியூசியத்திலே எனது மைத்துனரின் புகைப்படமும் அவர் கடையின் வரலாறும் அங்கு வைக்கப்பட்டிருந்தது.
கேட்டேன் எப்படிப்பா இப்படியெல்லாம்ன்னு…
நாங்க பைசி (மசாலா) வியாபாரம் தான் பண்றோம் எங்க கடை பொருள்களை இந்த மியூசியத்திற்காக இலவசமாக கொடுத்திருக்கிறோம் மார்கெட்டுல நாம்ம கடை மிக பழமையானது. அதனால நம்முடைய விபரங்களை இங்கு வைச்சுருக்காங்கன்னு. இதைப் பார்த்திட்டு பல டூரிஸ்டுகள் நம் கடைக்கு வராங்கன்னார்…

உண்மையில் இது எனக்கு ஆச்சிரியமாதான் இருந்தது…வாழ்த்துக்கள் கூறி விட்டு நடந்தேன்…

போற வழியில ஒரு நீர்வீழ்ச்சி இருக்கு அதுல குளிப்போமான்னார்…குளிக்கிறதுன்னா நமக்கு குலாப்சான் சாப்பிடுறமாதிரி …ம் குளிப்போன்னே…
காரை மலைப்பாதையில் ஒட்டிச் சென்றார்… கார் போய் கொண்டிருந்தது.
திடீரென்று என் மனைவி காரை நிறுத்து நிறுத்துங்க என்று கூச்சலிட்டார்… நான் பதறிப்போய் ஏன் என்னாச்சு என்று கேட்க நிறுத்த சொல்லுங்கன்னு திரும்பவும் கத்தினார் அதற்குள் காரை நிறுத்தினார்.



ஏன் என்ன…? என்று கேட்கும் போது கையை வெளியில் நீட்டி
அங்க பாருங்கன்னா…
கைக் காட்டிய இடத்தில் பார்த்தால் ரம்புத்தான் பழமரம்…
நிறைய்ய காய்ச்சி தொங்குது… இதைப்பார்த்ததும் என் மனைவியை விட எனக்கு ஆர்வம் அதிகமாச்சி…
அடஅடஅட… என்னம்மா காய்ச்சி தொங்குது… இந்த பழம் பத்து பீசை வச்சிகிட்டு துபாயில 15திரஹம் விக்கிறானுங்க இங்க சீண்டுவதற்கு ஆள் இல்லாம கிடக்கே மனசுகடந்து அடிச்சுக்கிச்சு…
பெரும்பாலோர் தங்கள் வீட்டு வாசல்களில் இந்த மரத்தை வளர்கிறார்கள்…

காரைவிட்டு இறங்கினோம் கிளைகளையும் கொப்புகளையும் இழுத்து பழங்களை பறிக்கத்தொடங்கினோம் எறும்புகள் அதிகம் இருந்தன… ஆனால அது கடிக்கல… என் சிட்டுகள் பையை பிடித்துக்கொண்டு டேடி பறிச்சு போடுங்கன்னு உற்சாக படுத்தினாங்க… அவங்களுக்கு ரொம்பவும் பிடித்த பழம் இது…
ஒரு பத்துபழம் தான் பறிச்சுரப்போம் காய் முய்னு சத்தம் வந்தது… திரும்பி பார்த்தால் அந்த மரத்தோட சொந்தக்காரன் இல்ல சொந்தக்காரி பத்தரக்காளி மாதிரி நின்னா… ஐயோ குடும்பத்தோட மாட்டினோம்டான்னு பக்பக்குன்னு நின்னே…
அவள் ஏதோ மலாய்ல பேச… என் மைத்துனர் ஏதோ சொல்ல புலியா வந்தவள் பூனையா போயிட்டா…
மைத்துனர்கிட்ட கேட்டேன்… அவள் என்ன சொன்னா நீ என்ன சொன்னே பேசாம போயிட்டாளேன்னு…
இவங்க திருடர்கள் இல்ல டூரிஸ்டு … பிரியப்படுறாங்க காசுவேணுன்னா வாங்கிக்கன்னு சொன்னேன்…
இல்ல வேண்டாம் பறிச்சிக்க சொல்லுன்னு… சொன்னாங்க…!

எவ்வளவு பெரிய மனசு… இதுவே நம் நாடாக இருந்தால் கட்டிவச்சு தோல உறிச்சுருப்பாங்க… அவசரபட்டுட்டோமே அவங்களிடம் அனுமதி கேட்டு பறிச்சிருக்கலாமேன்னு புத்தி… பின்னாடி சொல்லிச்சு…

வா… அவங்களிடம் மன்னிப்பு கேட்கலாம்னே… அதெல்லாம் வேண்டாம் நாம கிளம்பலாம் வாங்கன்னு அழைத்துப் போய்விட்டார்…

எவ்வளவு ஆசையாக பறிச்சமோ … பிறகு அந்த பழத்தை சாப்பிட யாருக்கும் மனசு வரலை… குழந்தைகளுக்கு முன்னாடி இப்படி நாம செஞ்சிருக்கக் கூடாது.
உற்சாகத்துல செய்திட்டோமேன்னு என் மனைவியிடத்தில் கூறி வருந்தினேன்…

நாம செய்யக்கூடிய ஒவ்வொரு செயலையும் குழந்தைகள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். விளையாட்டாக நாம செய்யக்கூடிய சில தவறுகளை குழந்தைகள் கால போக்கில் தவறையே விளையாட்டாக ஆக்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு தவறாகவே தெரிவதில்லை.

சமீபத்தில் நான் படித்த பெ. தூரனின் நூலில்

பெற்றோருடைய பேச்சு நடத்தை எல்லாம் குழந்தைக்கு முன்மாதிரியாக இருக்கின்றனவாதலால் அவற்றிலெல்லாம் அவர்கள் மிக எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். குழந்தையை நன்கு வளர்க்க ஆவல் கொண்டிருக்கும் பெற்றோர்கள் தங்கள் நடத்தையையே ஏன் வாழ்க்கையையே அதற்கேற்றபடி அமைத்துக் கொள்ள வேண்டும். களைய முடியாத குறைபாடுகளைக் குறைந்த பட்சம் குழந்தைக்குத் தெரியாதவாறாக மறைத்துக் கொள்ள வேண்டும்.-என்று கூறியிருக்கிறார்… இந்த வாசகங்களை மனதில் நிறுத்திக் கொண்டேன்… இனி இப்படி ஒரு சம்பவம் நம் வாழ்க்கையில் நடக்கக் கூடாது…!

Saturday, August 1, 2009

பிரபலங்களும் பிரியாணியும்...

சில தினங்களுக்கு முன் வலைப்பூ ஆரம்பிப்பது எப்படி...? என்ற நிகழ்ச்சியை கீழைராஸா ஏற்பாடு செய்தார்...எங்கு வைத்து செய்யலாம் என்ற கேள்வி வந்தது...
நான் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம்...என் வீட்டிலேயே வைக்கலாம்னு உற்சாகத்தில் சொல்லி தொலைக்க... நிகழ்ச்சி முடிவானது....

ஒரு வெள்ளிக்கிழமை காலை 10 மணின்னு முடிவு செய்யப்பட்டது...வெள்ளிக்கிழமைதான் துபாய் வாழ் எங்களுக்கு விடுமுறை....தூங்கனும்னு நினைக்கிறதே வெள்ளிதான்...இந்த வெள்ளிக்கு ஆப்புன்னு முடிவாச்சு....சரி ஒரு வெள்ளிக்கிழமை தானே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னு இருந்தேன்...

வெள்ளிக்கிழமையும் வந்துச்சு...ஒரு நாளுபேரு வருந்தாங்க.கீழைராஸா ,அப்துல் வாஹித் ,திருச்சி சையது ,சந்திரசேகர்...சிரிச்சு சிரிச்சு பேசினாங்க...அட நல்ல ஆளாக இருக்கிறாங்களேன்னு...நானும் அவங்களோடு சேர்ந்து சிரிக்க ஒரே சிரிப்பு மழையா இருந்துச்சு....!




வரும்போதே கீழை ராஸா அவருடைய லெப்டாப்பை எடுத்து வந்தாரு...அதை வச்சுதான் பதிவைப்பற்றிய பாடம் நடத்தினாரு....எனக்கு ஏற்கனவே பதிவு இருந்தாலும் சரி நமக்கு தெரியாத விசயங்கள் ஏதாவது இருக்கலாம் கத்துக்கலாம்னு ஆர்வத்தோட இருந்தேன்...
இப்படி அப்படின்னு எல்லாத்தையும் தெளிவாதான் சொன்னாரு....எல்லாம் முடிஞ்சு அவர் தயாரித்த குரும்படம் ஒன்னையும் போட்டு காண்பிச்சாரு...அட ஆளு சரியான கில்லாடியா இருப்பார்னு தோனுச்சு...

தொழுகை நேரம் நெருங்கியதுனால நாங்க எல்லோரும் தொழுது விட்டு வந்தோமுங்க.... ஹோட்டலுக்கு போய் மந்தி பிரியாணி சாப்பிடலாம்னு நான் தான் ஐடியா கொடுத்தேன்...கொடுத்தவரைக்கும் சரிதாங்க...

சாப்பிடும் போது எனக்கு முன்னால கீழைராஸா உட்காந்திருந்தாரு...சாப்பிட்டுகிட்டே சொன்னாரு...பிரியாணி சூப்பரா இருக்குன்னு....எனக்கு அப்படியே சில்லுனு இருந்துச்சு... நாம ரெக்கமடேசன் பண்ணின சாப்பாட்டை நல்லாருக்குன்னு சொல்லிட்டாரேன்னு குருட்டு உற்சாகத்துல நான் சூப்பரா பிரியாணி போடுவேன்னு சொல்லி வெச்சேன்...

அட பாராட்டுவாருன்னு பார்த்தா ... அப்படியா அப்ப அடுத்தவாரம் பிரியாணி ஆக்கிடுங்க நம்ம இந்த நாளுபேரும் சாப்பிடலாம்னு சொன்னாரு....! அப்பவே எனக்கு பகீர்ன்னது...ஐய்ஐயோ...வாயக்குடுத்து வாங்கிக்கிட்டமடான்னு....சரி நாலு பேர்தானேன்னு சமாளிச்சுடலாம்னு நானும் ரெடியாவுனேன்....!

ரெண்டு நாள் கழிச்சு கீழை ராஸா போன்போட்டாரு....என்ன பிரியாணி வேளையெல்லாம் எப்படி இருக்குன்னாரு...அதுக்கென்ன வியாழன்கிழமை எல்லா சாமான்களையும் வாங்கி ரெடிபண்ணிடுவேன்னே...



நாம நாளுபேரு மட்டுமல்ல இன்னும் ரெண்டு நண்பர்கள் வராங்கன்னாரு....
பரவாயில்ல ரெண்டுபேரு தானே..சமாளிக்கலாம்னு ஆறா கணக்கு பண்ணினேன்....
இதுல ஏன் பங்குக்கு நண்பர் நாசரை கூப்பிட்டேன்

மறு நாளு வாஹித் இருக்காறே....அவருதாங்க இந்த பட்டிமன்றத்துல யெல்லாம் குழைப்பாறே....அவரு போன் போட்டு
என்ன இஸ்மத் பாய் பிரியாணி வேளைய ஆரம்பிச்சுட்டீங்களான்னு கேட்டாரு....
அட என்னா பாசமா கேக்குறறேன்னு வியாழன்கிழமை தான் சாமான்கள் வாங்கனும்னு சொன்னேன்....
அப்படியா நல்லவேளை சாமான்கள் வாங்கிட்டீங்களோன்னு நனெச்சேன்னாரு
ஏன்னே...?
எனக்கு வேண்டியபட்டவரு ரெண்டுபேரு வறாங்க அதான் உங்ககிட்ட சொல்லிக்கிலாம்னு சரி சரி நீங்க வேலைய பாருங்கன்னாரு....
கணக்கு பார்த்தா எட்டுபேரு...?கொஞ்சம் பதட்டம் இருந்தாலும் சமாளிப்போம்னு தைரியம் இருந்துச்சு....

மாலைல திருச்சி சையது போன் பண்ணி பாய் நீங்க ஒன்டியா இருந்து கஸ்டப்படுவீங்களே நான் கூடமாட ஒத்தாசைக்கு வரவான்னாரு...? பரவாயில்லை நம்மமேல எவ்வளவு பாசம்ன்னு நினைச்சு...எதுக்கு உங்களுக்கு கஸ்டம் இவ்ளோ பண்றேன்....சின்னசின்ன வேலைகளையும் நானே பண்ணிக்கிரேனேன்னு சொன்னேன்...

அப்புறம் பாய் நம்ம வானலை வளர்த்தமிழ் ஆலோசகர் காவிரிமைந்தனுக்கு
தெரிஞ்சா வருத்தப்பட்டுக்குவாறேன்னு அவரையும் பிரியாணிக்கு கூப்பிட்டிருக்கேன்னாரு...!அவரு மட்டும் தானான்னே...? அவரைமட்டும் கூப்பிட்டா நல்லா இருக்காதேன்னு நம்ம பழனி அவரையும் கூட அழைச்சிருக்கேன்னு சொல்லிட்டு சாரி பாய்னு போனை வச்சுட்டாரு....

எனக்கு மூச்சு வாங்க ஆரம்பிச்சுடுச்சு....இன்னும் ஒருத்தருதான் பாக்கி நாளாவது சந்திரசேகர்....அவரு போனவாரமே நான்வரமாட்டேன் லீவுல ஊருக்கு போறேன்னு சொல்லிட்டு போயிட்டாரு...இல்லன்னா அவருரெண்டு பேர அழைச்சுட்டு வரேன்னு போன் பண்ணிருப்பாரு....தப்பிச்சோம் இதுவே பத்து பேராச்சு....

இதை நெனச்சு பயமே வந்துடுச்சு....ஒருவழியா எனக்கு நானே ஆறுதல்படித்துதிகிட்டு சமாளிக்கலாம்னு தைரியமா இருந்தேன்....

இன்று வியாழன் டூட்டி முடிச்சுட்டு பிரியாணிக்குள்ள வேலைய ஆரம்பிக்க ரெடியானேன்....காலிங் பெல் சப்தம் கேட்க கதவை திறந்தேன்....
பெரிய உருவத்தோடு கீழைராஸாவும் திருச்சி சையதும் நின்னாங்க....வாங்க வாங்க...ன்னு உள்ளே அழைத்தேன்....

உங்களுக்கு உதவிசெய்யலாம்னு தான் வந்தோம்னு கீழைராஸா சொன்னாரு....
என்னங்க உதவி பத்துபேருதானே சமாளிச்சுடுவேன்னு சொன்னேன்....
அந்த நேரம் பார்த்து கீழைராஸாக்கு போன் வந்துச்சு.....பேசினாரு பேசிகிட்டே வாச பக்கம் போனாரு....
நான் எதையோ எடுக்க வாசப்பக்கம் போக எதேச்சயா அவரு பேசுறத கேக்கக் கூடிய சந்தர்ப்பம் அமைஞ்சுடுச்சி....

சர்புதீன் பாய் ஒரு நல்ல பார்ட்டி சிக்கிருக்கு நல்லா பிரியாணி போடுவானாம்....நாளைக்கி பிரியாணி போட்டு பார்க்குக்கு எடுத்து போறோம்னு சொன்னாரு....
நானும் வரவான்னு அவருகேட்டிருப்பாரு போல...
உங்கள உட்டுட்டு போனா நல்லாயிருக்காது நீங்க அவசியம் வாங்கன்னாரு....
திரும்பவும் அவரு ஏதோ கேட்க.... பசங்களையா...? எத்தனை பேரு...?
எது வேனு நிறைய்யவா....அவ்ளோபேறா...?ன்னு கீழைராஸா வாயை பிளக்க....இதைக் கேட்ட எனக்கு மயக்கமே வந்துடுச்சு....ஒருத்தவனை வச்சு இவ்வளவு பேறா சமைக்கிறது...!
எக்குதப்ப இந்த ஆளுங்க கையில மாட்டிக்கினோம்டா...ன்னு சுதாரிச்சேன்....

திரும்பவும் பேசிக்கிட்டு இருந்தாரு .... இல்லபாய் இந்த வாரம் நீங்க மட்டும் வாங்க அடுத்தவாரம் உங்க பசங்ககளை யெல்லாரையும் அழைச்சுகிட்டு வரலாம்னு....போனை கட்பண்ணினாரு....
அடப்பாவிங்களா...இந்த வாரத்துக்குள்ள பிரியாணியே இன்னும் ரெடியாகல....அடுத்தவாரத்துக்கு இப்பவே பிளான் பண்றான்களேன்னு....இதை இப்படியே விட்டா சரியாவராது....முடிவுகட்டனும்னு நினைச்சேன்....

சாதரனமா வெள்ளிக்கிழமையில 10 மணிக்கும் 11 மணிக்கும் எழுந்திருக்கக்கூடிய நான் ....இந்த வெள்ளிக்கிழமை 4 மணிக்கே எழுந்திருச்சு பிரியாணி வேலைய ஆரம்பிச்சு 8 மணிக்கு தான் முடிச்சேன்....
வேலையெல்லாம் முடிச்சுட்டு கீழைராஸாவுக்கு போன் போட்டா....அந்தாளு அப்பதான் எழுந்திருக்கிறாராம்....என்னப்பா 8 மணிக் கெல்லாம் கிளம்பிடனும்னு சொன்னீகளே.... இன்னும் தூங்குறீங்களேன்னேன்...
வெள்ளிக்கிழமை பாய்...ன்னாரு...எது வெள்ளிக்கிழமையா...?
அப்ப எனக்கு என்ன கிழமையா..?.அடப்பாவிங்களா எல்லாருமா சேர்ந்து என் தூக்கத்தை கெடுத்திட்டீங்களடான்னு...ஒரு வழியா கிளம்பி பார்க் போய் சாப்பிட ஆரம்பிச்சாங்க...

ஒரு வாய் பிரியாணிய வாயில வச்சவுடனே திருச்சி சையது சொன்னாரு .....பாய் இது மாதிரி பிரியாணி நான் சாப்பிட்டதே இல்லன்னு சொல்ல....இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி மாட்டி விடுறாங்களே...
ஒவ்வொரு ஆளா அதையே ரிபிட்டு பாட....சட்டி காலியாச்சு...மனசுக்கு கொஞ்சம் திருப்பதியா இருந்தாலும்.....


கீழைராஸா எல்லாத்தையும் போட்டா எடுத்தாரு....சரி ஒரு ஞாபகத்துக்காக எடுக்குறார்னு நினைச்சேன்....
வானலை நிகழ்ச்சிக்கு போனப்ப பார்த்தா பிரியாணி போட்டோ எல்லார்கையிலும் இருந்துச்சு...என்னப் பார்த்ததும் பாய் நம்மள மறந்திட்டீங்களேன்னு குசலம் விசாரிச்சாங்க....

நாளுபேருன்னு சொல்லி இப்ப 400 பேருக்கு எத்திவச்சிட்டாங்களேன்னு .... நிகழ்ச்சி முடிந்ததும் வேகமா கிளம்பினேன்...

இஸ்மத் பாய்ன்னு ஒரு குரல்....
திரும்பி பார்த்தா சிம்மபாரதி....

வருகிற வெள்ளிக்கிழமை 4 பேருமட்டும் பிரியாணி போடுங்களேன்னு... சொன்னாரு
அவ்வளவு தான்....தலைதெறிக்க...திரும்பி கூட பார்க்காம ஒடிட்டேங்கோ....

இன்னும் முச்சு வாங்குதய்யா....முச்சுவாங்குது....!

(வடிவேல் பாணியில் ஒரு முயற்சி....சம்பவம் உண்மை)